தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த 2 பேரும் என்னை கவர்ந்து விட்டார்கள் – லக்ஷ்மனன் புகழாரம்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு முடித்துக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாளில் 336 ரன்கள் குவித்து முடித்துக்கொண்டது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது.

Thakur

- Advertisement -

இந்த போட்டியின் துவக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் விரைவிலேயே விக்கெட்டை இழக்க இவ்வளவு பெரிய ரன்கள் இந்திய அணிக்கு வர காரணமாக இருந்தவர்கள் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தான் ஏனெனில் ரோகித் சர்மா, கில், புஜாரா, ரகானே, அகர்வால் என முன்னணி வீரர்கள் அனைவரும் 186 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி குறைவான ஸ்கோர் தான் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் கூட்டணி அமைத்த சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் ஜோடியாக 123 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வலுவான நம்பிக்கை அளித்தனர். இதனால் இந்த போட்டி முடிந்து இவர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

sundar 1

குறிப்பாக இரண்டு பேருக்குமே இது கிட்டத்தட்ட அறிமுகப்போட்டி என்றே கூறலாம். ஏனெனில் வாஷிங்டன் சுந்தருக்கு இது முதல் டெஸ்ட் போட்டி, ஷர்துல் தாகூருக்கு இது இரண்டாவது போட்டி. இந்த போட்டியில் இவர்கள் இருவரும் முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்தது பின்னரும் தங்களது பேட்டிங்கை விட்டுக்கொடுக்காமல் முதலாவது அரை சதத்தை கடந்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும், தாகூர் 67 ரன்களை எடுத்து அசத்தி இருந்தனர். இதன் காரணமாக இவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

நான் உங்களது டெக்னிக், திறமை மற்றும் தைரியம் ஆகியவற்றை விரும்புகிறேன். இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக மாறி விட்டீர்கள் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். மேலும் உங்கள் இருவரது பேட்டிங் பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சயம் உதவும் என்றும் அவர் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement