ஹைய் கிளாஸ் பிளேயரிடம் இருந்து டாப் கிளாஸ் இன்னிங்ஸ் – வி.வி.எஸ் லக்ஷ்மனன் புகழாரம்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே செப்டம்பர் 2ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களை குவிக்க பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 290 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் குவித்தது.

pujara

- Advertisement -

இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் இந்த சிறப்பான ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக துவக்க வீரர் ரோகித் சர்மா திகழ்ந்தார். 256 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 127 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அயல்நாட்டு மண்ணில் முதல் சதம் அடித்த ரோகித் சர்மாவிற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் ரோகித் சர்மாவின் இந்த அபாரமான இன்னிசை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : டாப் கிளாஸ் இன்னிங்ஸ் ஒரு ஹை கிளாஸ் பிளேயரிடம் இருந்து வந்திருக்கிறது. இந்த இன்னிங்ஸ் நிச்சயம் இந்த தொடரின் முடிவை மாற்றும் என எதிர்பார்க்கிறேன். இந்த ஸ்கோரை மிகப்பெரிய முன்னிலைக்கு கொண்டு செல்லுங்கள் என விவிஎஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 171 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளதால் நிச்சயம் நான்காம் நாளான இன்று 320 முதல் 350 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கூறலாம்.

Advertisement