கஷ்டமான சுச்வேஷன்ல எப்படி விளையாடனுன்னு இவரை பாத்து கத்துக்கோங்க – அட்வைஸ் கொடுத்த லக்ஷ்மனண்

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் பேட்டிங் வீக்னஸ் பார்க்கப்பட்டது. ஏனெனில் துவக்க வீரர் ராகுல் எதுவும் எடுக்காமலும், ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார், அதன் பின்னராவது ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமையும் என்று எதிர்பார்த்த வேளையில் இஷன் கிஷன் 4 ரன்களிலும், பண்ட் 25 ரன்களில் வெளியேறினர்.

- Advertisement -

இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணியால் பெரிய ரன்குவிப்பிற்கு செல்ல முடியவில்லை. ஆனால் ஒரே ஒரு ஆறுதலாக ஒருபுறம் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அனைவருனுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை 20 ஓவர்களின் முடிவில் 156 ரன்களுக்கு உயர்த்தினார். 25 பந்துகள் வரை பொறுமையாக விளையாடி வந்த கோலி அதன்பிறகு டாப் கியரில் விளையாடி 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதில் 4 சிக்சர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். தனி ஒரு ஆளாக அந்த போட்டியில் விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்பை உயர்த்திய கோலிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து தெரிவிக்க ஒருபுறம் இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமணன் அவரது போராட்டத்தை வெகுவாக பாராட்டி இளம் வீரர்களுக்கு ஒரு அட்வைஸ்ஸும் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஒரு கட்டத்தில் இந்திய அணி 140 ரன்களையாவது எட்டுமா ? என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அதற்கு கோலி விடை கொடுத்தார். சேசிங் மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார். மிகக் கடினமான சூழலில் இந்திய அணியின் ஸ்கோரை மீட்டு வந்தார். இப்படி இக்கட்டான சூழ்நிலைகள் அவ்வப்போது வரும் அதில் எப்படி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை கோலியின் இந்த இன்னிசை பார்த்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் லட்சுமணன் தெரிவித்தார்.

Kohli

3 விக்கெட்டுகள் சரிந்த போது எப்படி களத்தில் நின்று விளையாட வேண்டும். மேலும் வரும் வீரர்களை வைத்து எவ்வாறு பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்றும் முதலில் பெரிய ஷாட்டுகள் ஆடாமல் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து அதன்பிறகு எப்படி பெரிய ஷாட்களை ஆடி ஸ்ட்ரைக் ரேட்டை இருமடங்காக மாற்ற வேண்டும் என்பதை கோலி செய்து காட்டினார் அதை பார்த்ததில் மகிழ்ச்சி என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement