இவரின் பவுலிங்கை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் ரொம்ப கஷ்டப்படுகின்றனர் – வி.வி.எஸ் லக்ஷ்மனன் ஓபன்டாக்

Laxman-1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி ஏழாம் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

indvsaus

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் கடும் விமர்சனத்துக்கு இடையே 2வது போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் முக்கிய வீரர்கள் பலனின்றி ரஹானே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றியில் தமிழக பந்துவீச்சாளர் ரவி அஸ்வினுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகை அல்ல.

ஏனெனில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் விக்கெட்டை வீழ்த்திய போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் எனும் அரிய சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சிறப்பான பந்து வீச்சு குறித்து பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமனன் கூறுகையில் :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரது பந்து வீச்சு மிக அற்புதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அஸ்வின் மிகத் திறமையான பந்து வீச்சாளர் அவர் ஒவ்வொரு பந்தையும், மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் வீசி வருகிறார். அஷ்வின் பந்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

- Advertisement -

Ashwin

மேலும் எந்த இடத்தில் எந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் என்பது தெளிவாக அஷ்வினுக்கு தெரிந்திருக்கிறது. அவரது பந்து வீச்சில் ஸ்மித் திணறியதையும் நாம் இந்தத் தொடரில் கண்டுள்ளோம் என அஸ்வின் குறித்து அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.