டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த 3 பேருக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும் – வி.வி.எஸ் லக்ஷ்மனன் கருத்து

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது ஜூலை 17ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் முதல் முறையாக தவான் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் செயல்பட இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

dravid

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் இந்த தொடரில் நிச்சயம் 3 வீரர்கள் விளையாடியாக வேண்டும் என்பது குறித்து தனது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் சுழற்பந்து வீச்சு ஜோடியான சாகல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து இதுவரை விளையாடவில்லை. இதன் காரணமாக தற்போது அணியில் பல இளம் வீரர்கள் வந்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் கொண்டவர்கள்.

Chahal

மேலும் டி20 உலகக் கோப்பையை மனதில்கொண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் அது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். மேலும் ஒருநாள் போட்டிகள் அனைத்திலும் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாட வேண்டும் இருவரும் தொடர்ந்து நிறைய ஓவர்கள் வீசினால் கட்டாயம் அவர்கள் பழைய ஃபார்முக்கு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய லட்சுமணன் கூறுகையில் :

sky 1

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் அவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் உலக கோப்பை டி20 தொடரில் இடம்பெறும் அளவிற்கு அவர் திறமை வாய்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement