இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை 21ம் தேதி வெலிங்டனில் துவங்குகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியும், ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது மேலும் டெஸ்ட் தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டம் டிரா ஆனதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டுமென இந்திய ரசிகர்கள் இந்திய அணியை பார்த்து ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் . மேலும், நியூசிலாந்து மண்ணில் பவுன்சர் , ஸ்விங், புது பந்தின் வித்தியாசம் என அனைத்தும் அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இதனை எவ்வாறு இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வார்கள் என்று ரசிகர்கள் கவலையுடன் இருந்து வருகின்றனர்.
இது குறித்து தற்போது பேசியுள்ள இந்தியாவின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் இந்தியாவின் வெற்றிக்கு ஆலோசனை கூறியுள்ளார். இந்திய வீரர்களுக்கு பெரிய சவால் காத்திருக்கிறது. மாயங்க் அகர்வால் ஒருநாள் போட்டியில் சரியாக ஆடவில்லை. அவருடன் பிரித்திவ் ஷா அல்லது சுபமன் கில் ஆகியோர் ஒருவர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இருவருக்கும் அனுபவமும் கிடையாது.

எந்த ஒரு நாட்டிலும் போட்டியை நடத்தும் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அடி கொடுக்க வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்து குவித்து முன்னிலை பெற வேண்டும் . புதுப்பந்தை நன்றாக ஆடவேண்டும் இதனை செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறியுள்ளார் லட்சுமணன்.



