இந்திய அணியின் தோல்விக்கு இந்த ஒருவர் மட்டும்தான் காரணம் – அணியின் முக்கிய வீரரை சீண்டும் விவிஎஸ் லட்சுமணன்

Laxman-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து 7 போட்டிகளை வென்ற இந்திய அணி முதல் முறையாக தோல்வி அடைந்துள்ளது.

Ind-lose

- Advertisement -

இதனை சாக்காக வைத்து இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? யார் காரணம்? என முன்னாள் வீரர்கள் பலர் அட்வைசுகளை கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் விராட் கோலியை காரணமாக காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

முதல் இன்னிங்சில் துவக்கத்தில் விராட்கோலி பொறுமையாக நிதானமாக ஆடினார் . ஆனாலும் விராட் கோலியை சீண்டும் வகையில் எதிரணி வீரர்கள் பவுன்சர் பந்துகளை வீசினர். இதனால் தனது ஆக்ரோச தன்மையை வெளிப்படுத்திய விராட்கோலி ஒரு சில பந்துகளை அடித்து தனது விக்கெட்டை இழந்தார் . பவுன்சர் பந்துகளை அவர் முகத்திற்கு அருகே வர வர , இவர் ஆக்ரோச நிலைக்குச் செல்கிறார். இதனால் அந்த பந்துகளை அடித்து தனது விக்கெட்டை இழந்து விடுகிறார் இவ்வாறு எல்லா பந்துகளையும் அடிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றுகிறது .

Kohli-2

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி பொறுமையை இழக்க கூடாது. பொறுமை இழந்து விட்டால் எளிதாக விக்கெட்களை கொடுத்துவிடுவார். இதே ஆடுகளத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தனது நிலையையும் பொறுப்பையும் உணர்ந்து ஆடினார். இதுபோன்று ஆடினால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார் விவிஎஸ் லட்சுமணன்.

Advertisement