கவனமா இருங்க. உங்க இடத்துக்கும் ஆப்பு இருக்கு – இந்திய சீனியர் வீரரை அலர்ட் செய்த லட்சுமனன்

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முழுவதுமாக புதிய அணியாக இளம் வீரர்களை கொண்ட அணியாக இருப்பதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

dravid

- Advertisement -

மேலும் கேப்டனாக தவானும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் செயல்பட இருப்பதால் இந்த தொடர் மீது அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்த அணியானது இலங்கையை எவ்வாறு கையாளப் போகிறது என்பதை காண அனைவரும் காத்திருக்கின்றனர்.

தற்போது இந்திய அணிக்கு உள்ளே இரு அணிகளாகப் பிரிந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வரும் அவர்கள் இன்னும் சில தினங்களில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளதால் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் பிரபலங்களும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் கேப்டனான தவானுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணன் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Dhawan 1

கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக விளையாடி வரும் உங்களுக்கு கிடைத்த ஒரு பரிசுதான் இந்த கேப்டன் பதவி. டி20 போட்டிகளில் நீங்கள் அதிக அனுபவம் கொண்டவர் இதன் காரணமாக இதனை சரியாக பயன்படுத்தி எதிர்வரும் டி20 உலக கோப்பையில் தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த தொடரை நீங்கள் சிறப்பாக வழி நடத்தும் பட்சத்தில் அதுவே உங்களது டி20 உலகக் கோப்பைக்கான இடத்தையும் உறுதி செய்யும். ஏற்கனவே விராட் கோலி ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த தொடரில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே உலக கோப்பை தொடரில் உங்களால் இடம் பிடிக்க முடியும் என தவானை லட்சுமணன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement