டிரீம் 11 இந்த வருடம் ஐ.பி.எல் ஸ்பான்சர் இல்லையாம். மீண்டும் வரும் பழைய ஸ்பான்சர் – விவரம் இதோ

ipl trophy
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 14வது சீசனுக்கான ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் நடைபெற வேண்டிய 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அப்போது இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வெகுசிறப்பாக பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு முடிவடைந்தது.

IPL

- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்சர்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் பி.சி.சி.ஐ டைட்டில் ஸ்பான்சர் ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்ற அழுத்தம் திருத்தமான கருத்தை முதலில் அறிவித்து இருந்தது. ஆனால் ஐபிஎல் தொடரின் ஸ்பான்சரிலிருந்து தானாக விலகிக் கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ முடிவு செய்தது.

அதேசமயம் 2020 ஆம் ஆண்டிற்கான டைட்டில் ஸ்பான்சராக ட்ரீம் லெவன் நிறுவனம் முன்வந்து கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஸ்பான்சர் செய்தது. இந்நிலையில் மீண்டும் 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் பெற விவோ கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது. பின்பு இந்நிலையில் இந்த வருட ஸ்பான்சர் யார் என்று கேள்வி எழுந்தது.

ipl

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக விவோ இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் லெவன் நிறுவனம் 222 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது. ஆனால் விவோ நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 400 கோடியை பிசிசிஐக்கு கொடுத்து வந்தது.

இதனால் மீண்டும் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக மாறும் என நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டைட்டில் ஸ்பான்சர் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதாக பி.சி.சி.ஐ தரப்பில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement