தோனி இனிமேல் சாதிக்க என்ன இருக்கிறது தோனியை பற்றி அதிரடியான கருத்தை கூறிய – விசுவநாதன் ஆனந்த்

செஸ் விளையாட்டில் பல பட்டங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் செஸ் போட்டிகளில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ms Dhoni Bhuvneshwar-Kumar

இந்நிலையில் அவர் தோனி குறித்தும் தோனியின் ஓய்வு குறித்தும் அவரது கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : எப்போது எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தோனிக்கு தெரியும். அவர் எந்த முடிவு எடுத்தாலும் சரியான முடிவையே எடுப்பார். மேலும் தோனி சாதிக்க இனிமேல் என்ன மிச்சம் இருக்கிறது.

அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் அனைத்தையும் சாதித்து விட்டார். இந்திய அணிக்காக 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையும் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என அனைத்து கோப்பைகளும் இந்திய அணிக்கு பெற்று தந்து விட்டார். ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் அவர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார்.

ms

மேலும் அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறார். எனவே அவர் தற்போது ஓய்வு முடிவை அறிவித்தால் அது சிறப்பானதாக தான் இருக்கும். ஏனென்றால் தோனியின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது என்று விசுவநாதன் ஆனந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.