கோலிக்கு முடிவெட்டிய அனுஷ்கா. வெட்டியா இருந்தா பண்ணத்தான் தோனும் – வைரல் வீடியோ

Anushka
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதிலும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர.

corona 1

- Advertisement -

ஏனெனில் கரோனா வைரஸ் பரவுவது சமூக தொற்று மூலமாகும். இந்த தருணத்தில் பிரபலங்களும் சினிமா மற்றும் கிரிக்கெட் வீரர்களும் வீட்டிற்குள்ளேயே இருந்து தங்களுடைய உற்றார் உறவினர்களுடன் பொழுதை கழித்து வருகின்றனர்.

அதிலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தாங்கள் பல ஆண்டுகாலம் எதிர்பார்த்த அந்த நிம்மதியை வீட்டிலேயே பெற்றுக் கொண்டிருக்கின்றனர். பரஸ்பரம் மற்ற வீரர்களுடன் வீடியோ காலில் பேசுவது வீட்டிற்குள்ளேயே அரட்டை அடித்துக்கொண்டு ஜாலியாக இருப்பது என பல வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் வீட்டிற்குள்ளேயே ஜாலியாக பொழுதை போக்கும் விஷயங்களை செய்து வருகின்றனர். நேற்று விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

- Advertisement -

அந்த வீடியோவில் அனுஷ்கா ஷர்மா விராட் கோலிக்கு முடி அலங்காரம் செய்கிறார். அதை செய்துவிட்டு அவரை பார்த்து ரசிக்கிறார். மேலும் இந்த வீடியோவை உங்களுக்காக பதிவிடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதை வீடியோவை பகிர்ந்துள்ள விராட்கோலி : எனது மனைவி சமையலறையில் உள்ள கத்தரிக்கோலை பயன்படுத்தி எனக்கு சிகை அலங்காரம் செய்து உள்ளார் என்று பதிவு செய்துள்ளார்.

விராட் கோலியின் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக ஷிகர் தவான் தனது வீட்டில் தான் துணி துவைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement