கேரளா இளைஞர் மதுவின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கிய இந்திய அதிரடி வீரர் – யார் தெரியுமா ?

viru
- Advertisement -

கேரளாவில் அரிசி பருப்பை திருடியதாக 16 இளைஞர்களால் கொடூரமான முறையில் மது என்கிற பழங்குடியின இளைஞர் பிப்ரவரி 22ம் தேதி அடித்தே கொலை செய்யப்பட்டார். பழங்குடி இளைஞரான மதுவின் கைகளை கட்டிவைத்து அடித்தும், அவருடன் செல்பி எடுத்தும் 16பேர் கொண்ட அந்த கும்பல் சித்தரவதை செய்தே கொன்றது.

malli

- Advertisement -

பின்னர் மதுவை கொலை செய்த கும்பல் மதுவின் கைகளை கட்டி அடித்தபின் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டது.இந்த கொடூரமான கொலை சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. உடனடியாக கேரள அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு மதுவின் கொலைக்கு காரணமான அனைவரையும் கைதுசெய்து சிறையில் தள்ளியது.

கேரள முதல்வர் பிரனாயி விஜயன் நேரடியாக மதுவின் வீட்டிற்கு சென்று அரசு தரப்பிலிருந்து உதவுவதாகவும் இனிமேல் இதுபோன்ற காட்டுமிராண்டித்தன செயல்கள் நடக்காமல் தடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.அதன்பின்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மதுவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.

virendra

இந்நிலையில் தற்போது கேரளாவில் அடித்துக்கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர் மதுவின் குடும்பத்திற்கு கிரிக்கெட் வீரர் சேவாக் நிதி உதவி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேரள இளைஞர்களின் செயலை கண்டித்து அப்போதே சேவாக் டிவிட்டரில் தனது கடுமையான கண்டனத்தை பதிவுசெய்திருந்தார்.

தற்போது சேவாக் தான் நடத்திவரும் அறக்கட்டளையிலிருந்து 1.5 லட்ச ரூபாயை மதுவின் தாயின் மல்லியின் பெயருக்கு காசோலையாக வழங்கியுள்ளார். அந்த காசோலையுடன் மதுவின் தாயிற்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பியுள்ளார்.சேவாக்கின் இந்த மனிதநேயத்தை பாராட்டி பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சேவாக்கின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement