இப்படி ஒரு சேன்ஸ்ஸை மிஸ் பண்ணிட்டியே. ரிஷப் பண்ட் குறித்து வருத்தப்பட்ட சேவாக் – என்ன காரணம் தெரியுமா?

Sehwag-and-Rishabh-Pant
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 260 ரன்கள் என்ற இலக்கினை துரத்திய இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 125 ரன்கள் அடித்து அசத்தலான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதுவரை 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள ரிஷப் பண்ட் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

- Advertisement -

இந்த போட்டியில் 113 பந்துகளை சந்தித்த அவர் 16 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 125 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதால் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். சமீப காலமாகவே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பண்ட் இந்த ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் மட்டும் ரிஷப் பண்ட் செய்த ஒரு சின்ன தவறினை சுட்டிக்காட்டி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இந்த போட்டியில் 42-வது ஓவரை சந்தித்த ரிஷப் பண்ட் முதல் 5 பந்துகளிலும் பவுண்டரி அடித்து 20 ரன்களை குவித்தார்.

Rishabh Pant 1

அதனை தொடர்ந்து கடைசி பந்தில் சிங்கிள் அடித்து விட்டு அதற்கு அடுத்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் சேவாக் கூறுகையில் நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ஆறாவது பந்திலும் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கவே முயற்சி செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் இடத்தில் நான் இருந்திருந்தால் அணியின் வெற்றிக்கு மூன்று, நான்கு ரன்கள் மட்டுமே தேவை என்கிற வேளையில் முதல் 5 பந்துகளையும் பவுண்டரியை அடித்திருக்கும் வேளையில் நிச்சயம் ஆறாவது பந்தையும் பவுண்டரி அடிக்கவே முற்பட்டிருப்பேன்.

இதையும் படிங்க : IND vs ENG : ஹார்டிக் பாண்டியாவின் ஆட்டத்தை பார்த்து வியந்து பாராட்டி தினேஷ் கார்த்திக் – போட்ட பதிவு

ஆனால் ரிஷப் பண்ட் அந்த பொன்னான வாய்ப்பை தவற விட்டுவிட்டார். போட்டியை அவர் பவுண்டரியுடன் அதே ஓவரில் முடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என சேவாக் கூடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement