5 ஐபிஎல் கப் வாங்கி என்ன பயன்? செமி பைனலில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி சேவாக் கூறுவது என்ன

Rohit Sharma Virender Sehwag
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. புகழ்பெற்ற அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 168/6 ரன்கள் சேர்த்தது.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

கேப்டன் ரோகித் சர்மா 27, கேஎல் ராகுல் 5, சூர்யா குமார் யாதவ் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 50 (40) ரன்களும் கடைசி நேரத்தில் மிரட்டிய பாண்டியா 63 (33) ரன்களும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் பந்திலிருந்தே சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் – ஜோஸ் பட்லர் ஓப்பனிங் ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 170/0 ரன்களை குவித்து பைனலுக்கு அழைத்துச் சென்றனர்.

சுமாரான கேப்டன்ஷிப்:

முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் முதன்முறையாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியாவுக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற நிலையில் அவர்களது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்ற இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.

Ganguly-ipl
IPL MI

அதனால் இம்முறை கோப்பை வெல்வது உறுதி என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 6 அணிகள் பங்கேற்ற மினி உலக கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் வழக்கம் போல சொதப்பிய இந்தியா பைனலுக்கு கூட செல்லாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. அப்போதே ஏமாற்றத்தை சந்தித்த இந்திய ரசிகர்களுக்கு நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி மிகப்பெரிய ஏமாற்றத்தை பரிசளித்தது.

- Advertisement -

அப்போட்டியில் மோசமான பவுலிங் மற்றும் 30 ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைக்காத ஓப்பனிங் ஜோடியின் மோசமான ஆட்டம் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதை விட நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மோசமாக இருந்ததாக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபத்துடன் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்று போற்றப்படும் ரோகித் சர்மா அதற்கேற்றார் போல் நேற்று செயல்படவில்லை என்று விமர்சித்துள்ள சேவாக் இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

Sehwag

“ரோகித் சர்மா இன்று உலகத்தரம் வாய்ந்த கேப்டனாக காட்சியளிக்கவில்லை. அவருடைய சில முடிவுகள் மோசமாக இருந்தது. குறிப்பாக அக்சர் படேலை பவர் பிளேவில் பயன்படுத்தாதது, பவர் பிளே ஓவரில் அர்ஷிதீப் சிங்கிற்கு 2வது ஓவர் வழங்காதது, புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஸ்டம்ப்களுக்கு அருகே வந்து நிற்குமாறு சொன்னது போன்ற அம்சங்கள் ரோகித் சர்மா அழுத்தத்துடன் கேப்டன்ஷிப் செய்ததை தெளிவாக காட்டியது. நாம் அவரை இந்தியாவின் சிறந்த கேப்டன் அல்லது ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் என்று அழைக்கிறோம்”

“ஆனால் இன்று அவர் நிறைய முடிவுகளை சரியாக செய்யவில்லை. அதற்கு காரணம் அழுத்தத்திற்கு அஞ்சி பதற்றத்துடன் கேப்டனாக செயல்பட்டால் இது போன்ற தவறான முடிவுகளை நீங்கள் களத்தில் எடுக்க நேரிடும்” என்று கூறினார். முன்னதாக 2013 ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்ற ரோகித் சர்மா தற்போது இந்தியாவுக்காக முதல் வருடத்திலேயே பைனலுக்கு கூட அழைத்துச் செல்ல முடியாத அளவுக்கு சுமாரான கேப்டன்ஷிப் செய்துள்ளார். இதிலிருந்து ஐபிஎல் போல அவரால் அழுத்தமான சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக செயல்பட முடியவில்லை என்பது நிரூபணமாகிறது.

Advertisement