IPL 2023 : கில், விராட், டு பிளேஸிஸ் இல்ல – என்னோட டாப் 5 பேட்ஸ்மேன்கள் இவங்க தான், தரமான பட்டியலை வெளியிட்ட சேவாக்

Sehwag
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் 2023 டி20 தொடர் பல பரபரப்பான போட்டிகளை விருந்தாக படைத்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் சாம்பியன் சென்னை மற்றும் நடப்பு சாம்பியன் ஆகிய அணிகள் மே 28இல் அகமதாபாத் நகரில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. பொதுவாக ஐபிஎல் என்றாலே விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்களை விட பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு தங்களை மகிழ்விக்கும் பேட்ஸ்மேன்களையே ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள்.

- Advertisement -

அந்த வகையில் இந்த சீசனில் குஜராத் ஃபைனலுக்கு மீண்டும் தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாகும் வகையில் இந்தியாவின் வருங்காலமாக கருதப்படும் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ரன் மெஷினாக எதிரணி பவுலர்களை பந்தாடி 16 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 851* ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஊதா தொப்பியை தனதாக்கியுள்ளார். அதே போல லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி பாதியிலேயே வெளியேறிய பெங்களூரு அணிக்காக கேப்டனாக முன்னின்று அதிரடி காட்டிய டு பிளேஸிஸ் 730 ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி 639 ரன்களும் விளாசி அசத்தலாக செயல்பட்டனர்.

சேவாக்கின் டாப் 5:
அத்துடன் சென்னை அணிக்காக சீராக ரன்களை குவித்து வரும் டேவோன் கான்வே, ருதுராஜ் கைக்வாட் ஆகியோரும் இந்த சீசனில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2023 தொடர் நாளையுடன் முடிவடைவதால் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட தம்முடைய டாப் 5 பேட்ஸ்மேன்களை முன்னாள் இந்திய அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும் அதில் ஆரஞ்சு தொப்பி பட்டியலில் டாப் 5 இடங்களில் இருக்கும் விராட் கோலி, கில், டு பிளேஸிஸ் உட்பட யாருமே இல்லை.

Rinku SIngh

மாறாக அழுத்தமான மிடில் ஆர்டரில் விளையாடி அசத்திய ரிங்கு சிங், சூரியகுமார் யாதவ், சிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருடன் ஹைதராபாத் அணிக்காக அசத்திய தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் க்ளாஸெனை தேர்ந்தெடுத்துள்ள சேவாக் அதற்கான காரணத்தை விவரித்து அவர்களை பாராட்டி பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் தொடரில் என்னுடைய பஞ்சபாண்டவர்களை போல் செயல்பட்ட 5 பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் நான் நிறைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்”

- Advertisement -

“அந்த வகையில் இந்த சீசனில் சிறந்த பேட்ஸ்மேன் என்று நினைக்கும் போது என்னுடைய மனதில் முதலாவதாக ரிங்கு சிங் பெயர் தான் வருகிறது. அதற்கான காரணத்தை நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன் யாருமே 5 சிக்ஸர்களை கடைசி ஓவரில் தொடர்ச்சியாக அடித்து தங்களது அணியை வெற்றி பெற வைத்ததில்லை. ரிங்கு சிங் மட்டுமே அதை செய்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சிவம் துபே சிறந்த மிடில் ஆர்டர் வீரர்”

Sehwag

“குறிப்பாக இந்த சீசனில் 33 சிக்ஸர்களை 160க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ள அவர் கடந்த சில சீசன்களில் சுமாராக செயல்பட்டாலும் இம்முறை களமிறங்கி சிக்சர்கள் அடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக செயல்படுகிறார். 3வது வீரராக மிகச்சிறந்த தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். நான்காவதாக தற்போதைய ஃபார்ம் காரணமாக சூரியகுமாரை தேர்வு செய்யவில்லை. மாறாக சமீபத்திய சர்வதேச போட்டிகளில் டக் அவுட்டான அவர் அதிலிருந்து மீண்டெழுந்து அசத்தியுள்ளார்”

இதையும் படிங்க:GT vs MI : ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடிச்சாலும் பரவாயில்ல. சூரியகுமாரை வீழ்த்த நான் போட்ட திட்டம் இதுதான் – மோஹித் சர்மா பேட்டி

“5வது இடத்தில் நிறைய வீரர்கள் இருக்கும் போதிலும் மற்றொரு மிடில் ஆர்டர் வீரரான ஹென்றிச் க்ளாஸெனை தேர்வு செய்கிறேன். ஹைதராபாத் அணியில் அவர் பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வேகம் மற்றும் சூழல் ஆகிய 2 வகையான பந்துகளையும் சிறப்பாக எதிர்கொள்ளும் அவரைப் போன்ற வெளிநாட்டு வீரர் மிகவும் அரிதானவர்” என்று கூறினார்.

Advertisement