- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி இன்னும் 2 வருடம் விளையாடிருக்கனும்.. அந்த மாதிரி 90% பிளேயர்ஸை விட சிறந்தவர்.. சேவாக் ஏமாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை குவித்து 30 சதங்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்தியாவின் ரன் மெஷினாக செயல்பட்டு வந்த அவர் கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் பெரியளவில் அசத்தவில்லை.

அதனால் அவரையும் கேப்டன் ரோஹித் சர்மாவையும் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது பெரும்பாலான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது இன்னும் 2 வருடங்கள் எளிதாக விளையாடியிருக்க முடியும் என்று ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சேவாக் ஏமாற்றம்:

ஏனெனில் 36 வயதில் இருக்கும் 90% வீரர்களை விட விராட் கோலி அற்புதமான ஃபிட்னஸ் கொண்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். அதையும் தாண்டி விராட் கோலி ஓய்வு பெற்றது தமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் சேவாக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“தொடர்ச்சியாக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற பசி தான் விராட் கோலியை மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. அவர் தன்னுடைய வழக்கமான முறைகளைத் தொடர்ந்து பின்பற்றக் கூடியவர். ரன்கள் வந்தாலும் இல்லையென்றாலும் கடினமாக உழைக்கக் கூடியவர். ஃபிட்னஸ் என்று வரும் போது 36 வயதில் இருக்கும் 90% வீரர்களை விராட் கோலி பின்னுக்குத் தள்ளி விடுவார்”

- Advertisement -

2 வருடம் விளையாட தகுதி:

“அதன் காரணமாகவே அவர் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டார் என்று நான் சொல்கிறேன். என்னைக் கேட்டால் அவர் இன்னும் 2 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கச்சிதமாக விளையாடியிருக்க முடியும்” என்று கூறினார். இருப்பினும் சமீப காலங்களாகவே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி தொடர்ச்சியாக தன்னுடைய விக்கெட்டை இழந்து வந்தார்.

இதையும் படிங்க: விராட் கோலிக்கு பாரத ரத்னா கொடுங்க.. கூடவே டெல்லியில் அந்த கெளரவத்தையும் கொடுங்க.. ரெய்னா கோரிக்கை

அதனால் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு விராட் கோலி ஓய்வு பெற்றதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக 10000 ரன்கள் அடிக்கும் சாதனையையும் அவர் 770 ரன்கள் வித்தியாசத்தில் தவற விட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்காகவும் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விராட் கோலி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -