- Advertisement -
உலக கிரிக்கெட்

மழையை குறை சொல்லாதீங்க.. இந்தியா – பாகிஸ்தானை வெச்சு ஐசிசி செய்யும் வேலையை நிறுத்தனும்.. சேவாக் விமர்சனம்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் போட்டியிலேயே சிறிய அணியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சொதப்பிய பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் அவமானத் தோல்வியை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவிடம் வெறும் 120 ரன்கள் அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது.

இருப்பினும் தங்களுடைய 3வது போட்டியில் கனடாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதனால் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றால் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை உருவானது. ஆனால் அந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
அதனால் பாகிஸ்தான் தங்களுடைய கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் காரணமாக ஒருவேளை அப்போட்டி நடந்திருந்தால் தாங்கள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருப்போம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரிலும் இந்தியாவிடம் 120 ரன்களை எடுக்க முடியாமலும் தோற்ற பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற தகுதியற்ற அணி என்று வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

அத்துடன் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இனிமேல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒரே குரூப்பில் சேர்த்து விளையாட வைக்கும் வேலையை ஐசிசி நிறுத்த வேண்டும் என்றும் சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எப்படி நீங்கள் மழையை குறை சொல்ல முடியும்? ஒருவேளை நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் முன்னோக்கி செல்வதற்கான தகுதியை பெறவில்லை”

- Advertisement -

“லீக் சுற்றில் வென்ற நீங்கள் ஒருவேளை சூப்பர் 8 சுற்றில் தோல்வியை சந்தித்திருக்கலாம். ஏனெனில் அங்கே உங்களுக்கு எளிதான எதிரணி இருக்காது. முதலில் நீங்கள் அறிமுகமாக களமிறங்கிய அணியிடம் (அமெரிக்கா) தோற்றதை உணர வேண்டும். எனவே நீங்கள் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை பெறவில்லை. இந்தியாவுக்கு எதிராக 120 ரன்கள் துரத்திய நீங்கள் விக்கெட்டுகள் மீதம் வைத்திருந்தும் 113 ரன்கள் மட்டுமே எடுத்தீர்கள்”

இதையும் படிங்க: இங்க சொதப்பினாலும் பரவால்ல.. விராட், ரோஹித் அங்க காலை வாரிடக்கூடாது.. ஓய்வு பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர்

“எனவே நீங்கள் மழையை எப்படி குறை சொல்ல முடியும்? 2007 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்தத் தொடரில் நாங்கள் வெவ்வேறு குரூப்பில் இருந்தோம். தற்போது ஐசிசி இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் வைத்திருப்பது குறித்து மறு பரிசலனை செய்ய வேண்டும். அவர்களை தோற்கடிக்கும் அணியை ஐசிசி வைத்திருக்கவில்லை என்பதை உறுதி செய்யும்” என்று கூறினார்.

- Advertisement -