- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கேப்டன்ஷிய விடுங்க.. பாபர் அசாம் அதுக்கே தகுதியற்றவர்.. பாகிஸ்தான் முன்னேற இதை செய்யணும்.. சேவாக் ஆலோசனை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்ற பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக வெறும் 6 ரன்கள் தோல்வியை சந்தித்தது. அதனால் கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வென்றும் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில் 32/6 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அயர்லாந்து கடைசியில் 106/9 ரன்கள் அடிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியின் தரம் மிகவும் குறைந்து போய் விட்டதாக வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். மேலும் பாபர் அசாம் கேப்டன் என்பதைத் தாண்டி அணியில் இருப்பதற்கே தகுதியற்றவர் என்றும் சேவாக் அதிரடியாக கூறியுள்ளார். அதே போல முகமத் ரிஸ்வான் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதாகவும் சேவாக் விளாசியுள்ளார்.

- Advertisement -

சேவாக் ஆலோசனை:
எனவே இந்த வீரர்களை கழற்றிவிட்டு பிஎஸ்எல் அல்லது உள்ளூர் தொடரில் அதிரடியாக விளையாடும் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை தெரிவிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்ருமாறு. “அயர்லாந்து 106 ரன்கள் அடிக்கும் என்று நாம் நினைக்கவில்லை. அதை சேசிங் செய்ய பாகிஸ்தான் 19 ஓவர்கள் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வெற்றி பெற்றார்கள்”

“ஆனால் அவர்கள் அயர்லாந்தை 32/6 என்ற நிலையிலிருந்து 106 போக விட்டனர். இத்தனைக்கும் பிட்ச் கடினமாகவோ அல்லது அயர்லாந்து பவுலிங் அற்புதமாகவோ இருந்ததாக தெரியவில்லை. பாபர் அசாம் சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய வீரர் கிடையாது. நன்கு செட்டிலாகி ஸ்பின்னர்கள் வீசும் போது மட்டுமே அவர் சிக்ஸர்களை அடிக்கக் கூடியவர். அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இறங்கி சென்று அல்லது கவர்ஸ் திசையில் சிக்சர் அடித்ததை நான் பார்த்ததில்லை”

- Advertisement -

“அவர் தரையோடு தரையாக அடித்து பாதுகாப்பான கிரிக்கெட்டை விளையாடுகிறார். அதனாலேயே தொடர்ந்து பெரிய ரன்கள் அடிக்கும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளது. ஆனால் ஒரு வீரராக நீங்கள் உங்களுடைய ஆட்டம் அணிக்கு உதவியாக இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். இல்லையேல் உங்களை நீங்களே கீழே இறக்கி பவர்பிளே ஓவரில் 50 – 60 ரன்கள் அடிக்கும் வீரருக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: விராட் கோலியை மாற்றாதீங்க.. மொத்த வரிசையும் பாழாகிடும்.. இந்திய அணியை எச்சரித்த வாசிம் ஜாபர்

“இப்படி சொல்வது கடினம் என்றாலும் ஒருவேளை கேப்டன் மாறினால் பாபர் அசாம் பாகிஸ்தான் டி20 அணியில் இடம் பிடிப்பதற்கு தகுதியற்றவர். ஏனெனில் தற்போதைய டி20 கிரிக்கெட்டுக்கு உகுந்த செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தான் தற்போது பிஎஸ்எல் அல்லது உள்ளூர் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடும் வீரர்களை கண்டறிய வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -