- Advertisement -
ஆசிய கோப்பை

அந்த கஷ்டத்தை ஈஸியா சமாளிச்சு.. 200 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுக்கும் அபிஷேக்கிடம் அரிதான திறமை இருக்கு.. சேவாக்

ஆசியக் கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 127/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்ஹான் 40, ஷாஹின் அப்ரிடி 33* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய இந்திய அணி நேர்த்தியாக விளையாடி 15.5 ஓவரில் 131/3 ரன்களை எடுத்து தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் 47*, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாய்ம் ஆயுப் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

அரிதான அபிஷேக்:

முன்னதாக அந்தப் போட்டியில் 128 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அபிஷேக் சர்மா 4 பௌண்டரி 2 சிக்சருடன் 31 (13) ரன்கள் குவித்து அற்புதத் துவக்கத்தைக் கொடுத்தார். குறிப்பாக ஷாஹீன் அப்ரிடிக்கு எதிரான முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த அபிஷேக் 2வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டு தன்னை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.

இந்நிலையில் புதிய பந்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது மிகவும் கடினம் என்று முன்னாள் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஆனால் அதை எளிதாக செய்யும் அபிஷேக் அரிதானத் திறமைக் கொண்டவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சேவாக் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சேவாக் பாராட்டு:

“அபிஷேக் போன்ற ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்யும் திறமையை நீங்கள் அரிதாகவே பார்க்க முடியும். தம்முடைய கேரியரில் 193 ஸ்ட்ரைக் ரேட் கொண்ட அவர் இன்று 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். புதிய பந்துக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர்கள் உங்களுக்கு சிலர் மட்டுமே கிடைப்பார்கள். நாம் பழைய பந்தில் அனைவரும் அதிரடியாக விளையாடுவதைப் பார்த்துள்ளோம்”

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் ஏன் ஆடுனோம்ன்னு இப்போ புரியுதா? ஆப்பிளை ஆரஞ்சுடன் கம்பேர் பண்ணாதீங்க.. கம்பீர் பேட்டி

“ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக புதிய பந்தில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடிப்பது கொஞ்சம் கடினம். அதை அபிஷேக் விதிவிலக்காக செய்கிறார். அவர் இறங்கி வரும் போது எங்கே பவுலிங் செய்வது என்ற பயம் பவுலர்களிடம் ஏற்படும். அவருடைய பேட்டிங்கை பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறினார்.

- Advertisement -