- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஸ்வின் நம்பர் ஒன்.. ஆடாமலேயே முன்னேறிய ரோஹித், ஜெய்ஸ்வால்.. லேட்டஸ்ட் ஐசிசி ரேங்கிங்ஸ்

இங்கிலாந்து – இலங்கை அணிகளும் பாகிஸ்தான் – வங்கதேச அணிகளும் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெற்றது. அந்த சூழ்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தர வரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இலங்கைத் தொடரில் பெரிய ரன்கள் குவிக்க தவறிய இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் 7 இடங்கள் சரிந்துள்ளார்.

அதன் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 751 புள்ளிகளுடன் டாப் 10 பேட்ஸ்மேன் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். அதே போல இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 740 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கும் விராட் கோலி 737 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். இத்தனைக்கும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து தொடருக்குப்பின் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

- Advertisement -

ஐசிசி டெஸ்ட் தரவரிசை:

ஆனால் சில வெளிநாட்டு வீரர்கள் கீழே சரிந்ததால் இந்திய வீரர்கள் விளையாடாமலேயே முன்னேற்றத்தை சந்தித்துள்ளனர். அதே சமயம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக முதலிடத்தில் இருக்கிறார். அதே போல டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் 870 புள்ளிகளுடன் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலித்து வருகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 3வது இடத்தையும் ரவீந்திர ஜடேஜா 7வது இடத்தையும் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 444 புள்ளிகளுடன் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 322 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்திய வீரர்கள் முன்னேற்றம்:

அக்சர் படேல் 269 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார். அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. இந்தியா 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இதையும் படிங்க: 18 வருடம் கழித்து.. பும்ரா, பாபர், ரோஹித், கோலி, அப்ரிடி ஒரே அணியில் விளையாடும் தொடர்? வெளியான தகவல்

அந்தத் தொடரில் வெற்றி பெற்றால் இந்திய அணியும் வீரர்களும் இன்னும் முன்னேற்றத்தை சந்திப்பார்கள் என்றே சொல்லலாம். வங்கதேசத்துக்கு எதிரான அந்த தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி செப்டம்பர் 12 முதல் சென்னையில் பயிற்சிகளை துவங்க உள்ளது.

- Advertisement -