கடும் கோவத்தில் அனுஷ்கா.! வைரல் வீடியோவை வெளிட்ட விராட் கோலி..! வீடியோ உள்ளே..!

anushkoli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி கடந்த ஆண்டு இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்ததிலிருந்து இன்று வரை இவர்கள் இருவரும் ஒரு ரொமேன்டிக் ஜோடியாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

virat_kohli

- Advertisement -

அனுஷ்கா கோலி வாழ்வில் வந்ததில் இருந்து தான், கோலி கிரிக்கெட்டில் சரியாக கவனம் செலுத்தாமல் போட்டிகளில் சுதப்பி வருகிறார் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால், கோலி தனது மனைவியை எப்போதும் விட்டுக் கொடுக்காமல் தான் இருந்து வருகிறார்.

அடிக்கடி கோலி மற்றும் அனுஷ்கா பற்றிய பல வீடீயோக்கள் சமூக வலைத்தளங்கில் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் கோலி , தனது மனைவி சமூக அக்கறையுடன் செய்த செயல் ஒன்றை வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் கோலி மற்றும் அனுஷ்கா காரில் சென்றுள்ளார். அப்போது மற்றொரு காரில் சென்றவர் சாலையில் குப்பையை வீசியுள்ளார். இதை கண்டு கோவமடைந்த அனுஷ்கா அந்த காரில் அமர்ந்திருந்தவரை துரத்தி பிடித்து ‘சாலையில் இப்படி பிளாஸ்டிக் குப்பைகளை வீசலாமா’ என்று அந்த நபரிடம் சற்று கடுமையுடன் அறிவுரை கூறினார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கோலி.

Advertisement