கோலிக்கு மெழுகு சிலையா..? எங்கு..ஏன்..எதற்கு தெரியுமா..? ஆதாரம் உள்ளே

virat
- Advertisement -

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும் இந்த ஆண்டு பி சி சி ஐ அறிவித்துள்ள சிறந்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் கோலிக்கு சிறந்த சர்வேதேச விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோலிக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப் பட்டுள்ளது.

virat statue

- Advertisement -

தற்போதய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் கோலி, இளம் வயதிலேயே கிரிக்கெட் உலகில் கால் பதித்தவர். இதனால் அவருக்கு கிரிக்கெட்டில் சாதனை படைக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துக் கொண்ட கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இருந்த சச்சினின் சாதனைகளை கோலி கண்டிப்பாக முறியடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு அவரது சொந்த ஊரான டெல்லியில் ஒரு கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மேடம் தூளாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் கிரிக்கெட்டர் கோலிக்கு மெழுகு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜூன்6 ) திறக்கப்பட இந்த சிலை திறப்பு விழாவிற்கு கிரிக்கெட்டர் கோலி நேரில் சென்றிருந்தார்.

virat statue

virat-kohli statue

ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், உலகின் அதிவேக மனிதன் என்றழைக்கப்படும் ஹுசைன் போல்ட் போன்ற மாபெரும் விளையாட்டு வீரர்களுக்கு சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தலைமுறை கிரிக்கெட் வீரரான கோலியின் சிலை இந்த அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளது கோலிக்கு கிடைத்த மிக பெரிய கௌரவம் தான்.

Advertisement