டி20 உலகக்கோப்பையில் பல்வேறு சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி – என்னென்ன சாதனைகள்

Virat-Kohli
- Advertisement -

ஐசிசி டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் மாதம் துவக்கத்தில் இருந்து இறுதிவரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக 20 அணிகள் பங்கேற்று விளையாட காத்திருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு இந்து தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு தற்போது அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணி நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி சில முக்கிய சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் என்னென்ன சாதனைகளை விராட் கோலி நிகழ்த்த இருக்கிறார் என்பதை இந்த பதிவில் காணலாம். அந்தவகையில் டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே அதிக பவுண்டரிகளை அடித்த வீரராக மஹேலா ஜெயவர்த்தனே 111 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து விராட் கோலி 103 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த தொடரில் நிச்சயம் அவரது சாதனையை விராட் கோலி கடந்து விடுவார். அதே போன்று டி20 உலக கோப்பை தொடரில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் டிவில்லியர்ஸ் 23 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து டேவிட் வார்னர் 21 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி 16 கேட்ச்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதினால் நிச்சயம் டிவில்லியர்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் ஒரு மேட்டரே இல்ல.. ஆஸ்திரேலியாவுக்காக அவர் அட்டகாசமா விளையாடுவாரு.. உஸ்மான் கவாஜா நம்பிக்கை

மேலும் டி20 உலக கோப்பை ஒரே தொடரில் அதிக ரன்கள் (319) அடித்த வீரராக முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி தன்னுடைய சாதனையை தானே முறியடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த தொடரில் ஒரு வீரர் ஒன்பது போட்டி வரை விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement