இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ரஞ்சிக்கோப்பையில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக அறியப்படும் அவர் தற்போது சுமாரான ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் அவருடைய சுமாரான ஆட்டம் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி தன்னுடைய ஃபார்மை மீட்டெடுப்பதற்காக 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளார். அதற்காக விராட் கோலி ஸ்பெஷல் பயிற்சிகளையும் எடுத்துள்ளார். குறிப்பாக அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் பிரச்சனையை தீர்க்க சஞ்சய் பங்கருடன் சேர்ந்து அவர் முக்கியமான பயிற்சிகளை எடுத்தார்.
12 வருட கம்பேக்:
எனவே ரஞ்சிக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசியாக வீரேந்திர சேவாக் தலைமையில் 2012ஆம் ஆண்டு விளையாடிய அவர் தற்போது இளம் வீரர் ஆயுஸ் பதோனி தலைமையில் களமிறங்க உள்ளார். முன்னதாக தற்போது சீனியர் வீரராக இருக்கும் விராட் கோலி இளம் வீரர் ஆயுஷ் படோனி தலைமையில் விளையாட டெல்லி நிர்வாகம் விரும்பவில்லை.
அதனால் நீங்கள் கேப்டனாக இருங்கள் என்று டெல்லி அணி கேட்டுக் கொண்டதை விராட் கோலி பெருந்தன்மையுடன் மறுத்து விட்டார். இந்நிலையில் தம்முடைய தலைமையில் விளையாட உள்ள விராட் கோலி இதுவரை தாம் விளையாடி வந்த 4வது இடத்தில் களமிறங்க உள்ளதாக டெல்லி கேப்டன் ஆயுஷ் படோனி தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து முதல் முறையாக விளையாட உள்ளது கௌரவம் என்றும் படோனி கூறியுள்ளார்.
கலக்கல் பிளான்:
இதைத் தொடர்ந்து ஜனவரி 30ஆம் தேதி ரயில்வே அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கியுள்ளார். அந்தப் போட்டியை டெல்லி மைதானத்தில் உள்ளூர் ரசிகர்கள் இலவசமாக பார்ப்பதற்கு அம்மாநில வாரியம் அனுமதித்துள்ளது. அதற்கு ரசிகர்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டையின் நகலை மட்டும் எடுத்து வந்தால் போதும் என்று டெல்லி வாரியத்தின் செயலாளர் அசோக் குமார் சர்மா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 16 ஓவர்களை அவங்கள வெச்சே போட முடியுமா? சூரியகுமார், கம்பீரின் தவறான அணி தேர்வை விமர்சித்த.. ஆகாஷ் சோப்ரா
இந்த அனுமதி டெல்லி மைதானத்தில் இருக்கும் கௌதம் கம்பீர் ஸ்டாண்ட் பகுதியில் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். விராட் கோலி விளையாடுவதை பார்க்க 10000 ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே அந்தப் போட்டிக்கு முதலில் நேரடி ஒளிபரப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது விராட் கோலி விளையாடுவதால் ஜியோ சினிமா சேனல் ஸ்பெஷல் நேரலை ஒளிபரப்பு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.



