Virat Kohli : குலதீப் யாதவை அடுத்த போட்டியில் தூக்கி இவரை அணியில் சேர்க்க உள்ள கோலி – திட்டம் இதுதான்

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது

Kohli
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

india

- Advertisement -

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் ஒரு மாறுதலை ஏற்படுத்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முடிவு எடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விராத் கோலி மேற்கொள்ளவிருக்கும் மாற்றம் குறித்து இந்த பதிவில் காணலாம். கடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அந்த போட்டிகளில் புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலும் குல்தீப் யாதவ் சோபிக்க தவறியதால்அவர் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே அவர் அடுத்துள்ளார். அது மட்டுமின்றி நிறைய ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க கோலி திட்டமிட்டுள்ளார். அதன்படி குல்தீப் யாதவ் பதிலாக இந்திய அணியில் ஜடேஜா இடம் பெற்றால் அது இந்திய அணி பேட்டிங்க்கும் பெரிய அளவில் உதவும் மேலும் அவர் பவுலையும் சிறப்பாக செய்வார் என்று கோலி கருதுகிறார்.

jadeja

எனவே இந்திய அணியில் மூன்று ஆல்ரவுண்டர்கள் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் கோலி ஜடேஜாவை அணியில் சேர்க்க உள்ளார். ஏற்கனவே இந்திய அணியில் பாண்டியா மற்றும் ஜாதவ் ஆகியோர் உள்ளதால் நாளைய போட்டியில் ஜடேஜா சேர்க்கப்பட்டால் மூன்று ஆல்ரவுண்டர்கள் இருப்பார்கள் இது இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவும் என்றும் கோலி கருதியுள்ளார். எனவே நாளைய போட்டியில் இந்திய அணியில் இந்த மாற்றம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement