உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்திய அணிக்கு எப்படி இருக்கும் – விராட் கோலி வெளிப்படை

- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக ஜூன் இரண்டாம் தேதி இன்று இங்கிலாந்து பயணத்தை துவங்கி உள்ளது. நாளை 3ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு சென்றதும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். முன்னதாக கடந்த மாதம் 19ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இன்று இங்கிலாந்து புறப்பட்டனர்.

IND

- Advertisement -

மேலும் இங்கிலாந்து சென்று இறங்கிய பின்னர் அங்கும் குவாரன்டைனில் இருந்து கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பயிற்சியை துவங்குவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னர் இந்த இறுதிப் போட்டி குறித்து சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நிச்சயம் இந்திய அணிக்கு சவாலான ஒன்றாகவே இருக்கும். ஆனாலும் இந்த போட்டியை நாங்கள் அனுபவித்து விளையாட இருக்கிறோம் ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதனால் இறுதிப் போட்டியிலும் அதேபோன்ற ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு முயற்சிப்போம். மேலும் என்னுடைய பேட்டிங் குறித்து எனக்கு எந்த ஒரு பிரஷரும் இல்லை. இறுதிப்போட்டியில் நான் இன்று இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று விராட் கோலி கூறினார்.

IND

மேலும் இங்கிலாந்து தொடர் குறித்து அவர் பேசுகையில் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு முன்னர் ஆறு வாரங்கள் எங்களுக்கு ஓய்வு இருப்பதால் அதனை சரியாக பயன்படுத்தி நாங்கள் எங்களை ரிலாக்ஸ் செய்து கொண்டு அந்த தொடருக்காக சிறப்பாக ஆயத்தமாவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த இங்கிலாந்து தொடரிலும் நாங்கள் சிறப்பாக விளையாடி ஒரு அணியாக வெற்றிக்காக மட்டுமே முயற்சிப்போம் என கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

INDvsNZ

ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அதன் பிறகு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement