RCB vs PBKS : நான் பவுலர்ஸ் கிட்ட சொன்னது இந்த ஒரு விஷயம் மட்டும் தான். வெற்றிக்கு பிறகு – கேப்டன் விராட் கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது இன்று மதியம் மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த ஆட்டத்தின் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

RCB vs PBKS

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக டூப்ளிசிஸ் 84 ரன்களையும், விராட் கோலி 59 ரன்களையும் குவித்து அசத்தினார்கள்.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் :

RCB

புள்ளி பட்டியலின் கணக்கினை வைத்து ஒரு அணியை முடிவு செய்யக்கூடாது. இன்னும் இந்த தொடரில் நிறைய போட்டிகள் உள்ளன. இனிவரும் போட்டிகளிலும் நிச்சயம் எங்களது அணி சிறப்பாக செயல்படும். இந்த போட்டியில் டூப்ளிசிஸ் அருமையாக விளையாடினார். அவரது ஆட்டமே எங்களது அணியின் 20-30 அதிகமான ரன்களுக்கு வழி வகுத்தது.

- Advertisement -

இந்த மைதானத்தில் அதிரடியாக விளையாடுவது சற்று கடினமாகவே இருந்தது. அதனால் முதல் பாதி முடிந்ததுமே எங்களது அணியின் பந்துவீச்சாளர்களிடம் டார்கெட் நாம் நினைத்ததை விட அதிகமாகவே உள்ளது. எனவே நாம் முடிந்தவரை அவர்களை விரைவில் வீழ்த்த வேண்டும் போட்டியை இறுதிவரை எடுத்து செல்லக்கூடாது என்று கூறினேன்.

இதையும் படிங்க : IPL 2023 : அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது பற்றி வார்னர், ராகுல் அவர்கிட்ட கத்துக்கணும் – இந்திய வீரரை பாராட்டிய ஹர்பஜன்

அதேபோன்று பவர்பிளே ஓவர்களிலேயே நாங்கள் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தோம். அதன் காரணமாக போட்டி நீண்டதூரம் எடுத்து செல்லக்கூடாது என்றும் நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியிருந்தேன். அந்த வகையில் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement