உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக இவரே திகழ்வார் – கோலி புகழாரம்

kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதன்பிறகு இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வீரர்களான ரஹானேவின் சதம்(102), விஹாரியின் சிறப்பான ஆட்டம் என இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சால் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பும்ரா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருது ரஹானேவுக்கு வழங்கப்பட்டது.

Bumrah-1

போட்டி முடிந்து பேசிய இந்தியன் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்த வெற்றி கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். ரஹானே இரண்டு இன்னிங்சுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய வருகை இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பலத்தை சேர்த்துள்ளது.மேலும் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருவதால் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டிய நோக்கத்துடன் தற்போது விளையாடி வருகிறது.

bumrah

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணியின் முக்கிய வீரராக பும்ரா திகழ்வார். இந்திய அணிக்காக பும்ரா டெஸ்ட் போட்டிகளில் தனது பங்கை அளிப்பார் மேலும் இந்திய அணியின் பந்து வீச்சு தற்போது சிறப்பாக உள்ளது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்களது பொறுப்பினை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஒரு அணியாக தற்போது இந்திய அணி சரியான பாதையில் செல்கிறது என்று நான் நினைக்கிறேன். இனிவரும் போட்டிகளிலும் வெற்றி தொடரும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement