என் வாழ்நாளில் ரொம்ப மோசமான தொடர் இதுதான். அப்போ ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன் – கோலி பகிர்வு

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடர் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருந்தது என்றே சொல்லலாம்.அது மறக்க கூடிய கசப்பான தொடர் அகும்.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது சுவிங் பந்தில் அவர் பலமுறை விக்கெட் கீப்பரிடமும், சிலிப் பகுதியிலும் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

kohli 3

- Advertisement -

இந்த தொடரில் விராட் கோலியின் ஸ்கோர் 1, 8, 25, 0, 39, 28, 0, 6, 20 ஆகிய ரன்களாக இருந்தது. அவரது சராசரி 13.5 ஆக இருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் பாடங்களை கற்று தனது தவறுகளை திருத்திக் கொண்டு விராட் கோலி அடுத்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 692 ரன்களை அதிரடியாக விளாசினார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து பயணத்தில் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘நாட் ஜஸ்ட் கிரிக்கெட்’ என்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் நிக்கோலசுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த உரையாடலின்போது 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் மோசமாக பேட்டிங் செய்தபோது எப்படி உணர்ந்தீர்கள். மன அழுத்தம் இருந்ததா? என்று நிக்கோலஸ் கேட்டார். இதற்கு பதிலளித்த விராட் கோலி : மோசமான ஆட்டத்தால் எனக்கு மன அழுத்தம் இருந்தது. அதனுடன் கடுமையாக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மிகுந்த அதிகமான வலியால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.மோசமான ஆட்டத்தில் இருந்து எப்போது மீண்டு வருவேன் என்று புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியாதவனாக நான் அப்போது இருந்தேன். அப்போது உலகிலேயே நான் தனி மனிதனாக இருப்பது போன்று உணர்ந்தேன்.

நான் மிகுந்த மன அழுத்தத்திலும் நம்பிக்கை அற்றவனாக இருந்தபோது பலரும் எனக்கு ஊக்கமளித்தனர். யாரும் என்னுடன் பேசவில்லை. ஆதரவு அளிக்கவில்லை என்று நான் ஒரு நாளும் சொல்ல மாட்டேன். 1990களில் இருந்த இந்திய அணிதான் என் கிரிக்கெட் சார்ந்த கற்பனையை மேலும் விசாலப்படுத்தியது. நான் பார்த்த வரையில் மிகவும் வித்தியாசமாக இருந்தது. 18 வயதில் என் தந்தையை இழந்தேன்.

virat kohli

நான் சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வர வேண்டும் என்று அவர் விரும்பினார். என்னுடைய தந்தையின் கனவும், என்னுடைய கனவும் ஒருநாள் நனவாகும். தேசத்துக்காக உயர்ந்த இடத்தில் இருந்து விளையாடுவேன் என்று நம்பினேன்.இவ்வாறு விராட் கோலி கூறினார். அப்பா கண்ட கனவு தற்போது நனவானது. இந்தியாவின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக தன்னை வடிவமைத்த கொண்டார் என்றே நாம் கூறலாம்.

Advertisement