இந்த ஒரு விஷயம் எனக்கு டெஸ்ட் போட்டியில சுத்தமா பிடிக்காது மனம்திறந்த கேப்டன் கோலி

- Advertisement -

விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ஆக்ரோஷமாக வழிநடத்தி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இதற்கு முன்னர் இருந்த கேப்டன்கள் எல்லாம் செய்யாத சாதனையை செய்து கொண்டிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியை வென்றது, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது, இங்கிலாந்தில் பட்டையை கிளப்பியது என அடுத்தடுத்து ஒரு கேப்டனாக சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.

Ind-lose

- Advertisement -

சவுரவ் கங்குலிக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த ஆக்ரோசமான கேப்டன் இவர்தான் என்ற பெயரையும் பெற்று விட்டார். கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியில் தனது அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்று கூறியுள்ளார் விராட் கோலி. அவர் கூறுகையில்…

டெஸ்ட் போட்டியில் ட்ரா என்பது எனது அகராதியில் கிடையாது. எப்படிப் பார்த்தாலும் வெற்றியை நோக்கியே செல்வேனே. உதாரணமாக 300 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் அதனை ட்ரா செய்ய முயற்சி கூட செய்ய மாட்டேன். அதனை அடித்து வெற்றி பெறவே பார்ப்பேன். எடுத்துக்காட்டாக 300 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு செஷனிலும் 100 ரன்கள் அடிக்க வேண்டும்.

Kohli-3

அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு விக்கெட் விழுந்து விட்டால் ஒரு செஷனில் 80 ரன்கள் அடிக்க வேண்டும். இப்படியே சென்று கொண்டிருந்தால் கடைசியாக 30 ஓவர்களில் 120 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைமை வரும் . அப்போது விக்கெட்டுகள் கையில் இருக்கும் அந்தத் தருணத்தில் ஒருநாள் போட்டியை போல் ஆடி வெற்றி பெற முயற்சிப்பேன்.

Kohli 4

இவ்வாறு எப்போதும் வெற்றிக்காக தான் செல்வேன். நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விட்டால் மோசமாக அடைந்து விட்டால் மட்டுமே அந்த போட்டியை ட்ரா செய்வது பற்றி யோசிப்பேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement