தோல்விக்கு காரணம் அவங்க 2 பேர் இல்ல. அவங்கள திட்டாதீங்க ப்ளீஸ் – விராட் கோலி வேண்டுகோள்

kohli 2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் காரணமாக ஐசிசி நடத்திய கோப்பையை வெல்லும் அருமையான வாய்ப்பை மீண்டும் ஒருமுறை இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இழந்துள்ளார். இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய அணிக்கு மட்டுமின்றி கேப்டன் கோலி மீதும் அதிக அளவு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

- Advertisement -

சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு மைதானம் முழுவதுமாக ஒத்துழைத்த காரணத்தினால் நியூசிலாந்து அணி 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆனால் இந்திய அணியோ வித்தியாசமாக 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற காம்பினேஷனில் களமிறங்கியது.

இப்படி வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது தவறு என்றும் இதன் காரணமாகவே இந்திய அணி தோல்வி அடைந்தது என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் கோலியின் இந்த முடிவு தவறானது என்றும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கருத்திற்கு பதிலளித்த கேப்டன் கோலி கூறுகையில் :

ashwin 2

இந்திய அணி இந்த இறுதிப் போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க முடிவு செய்தது சரியான ஒன்றுதான். ஆனால் போட்டி அவ்வப்போது மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் தடைப்பட்டு நடந்ததால் எங்களால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் போட்டி தடைபடாமல் தொடர்ந்து நடந்திருந்தால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் நிறைய ஓவர்கள் வீசி நிறைய விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள்.

IND

ஆனால் இந்த இறுதிப்போட்டியில் அதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு அமையவில்லை எனவே அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய வீரர்களை விமர்சிக்க வேண்டாம் என விராட் கோலி வேண்டுகோள் வைத்துள்ளார். அணியில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவது பேட்டிங்கில் பலத்தை அதிகரிக்கும் என்று கூறிய நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement