இந்த 2 பேரின் வருகை பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது – விராட் கோலி ஓபன்டாக்

Kohli
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது கொரோனா அச்சம் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெற துவங்க இருக்கின்றன. இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. அதனை தொடர்ந்து நாளை அபுதாபியில் நடைபெற இருக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

RCBvsKKR

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் பெங்களூர் அணி தாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் சிவப்பு நிற சீருடை அல்லாமல் நீல நிற சீருடை அணிந்து விளையாடுகின்றனர். இந்த போட்டி முடிந்ததும் அவர்கள் பயன்படுத்திய சீருடை ஏலத்தில் விடப்பட்டு அந்த தொகையானது கொரோனா தடுப்பு ஊசி பணிகளுக்காக இந்தியாவிற்கு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய சீருடையை அறிமுகப்படுத்திய கேப்டன் விராட் கோலி பெங்களூர் அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.

இது குறித்து அவர் கூறுகையில் : எங்கள் அணியில் தற்போதைய இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது பாதியில் விளையாடிய ரிச்சர்ட்சன் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் விளையாடவில்லை அவர்களுக்கு பதிலாக தற்போது இலங்கை வீரர்களான துஷ்மந்தா சமீரா மற்றும் ஹஸரங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Hasaranga

இலங்கையில் அவர்கள் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அங்கிருக்கும் மைதானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் மைதானங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே இங்கு எவ்வாறு பந்து வீசுவது என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். நிச்சயம் அவர்களது வருகை எங்கள் அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

hasaranga 1

சில வீரர்கள் விலகினாலும் தற்போது நாங்கள் வலுவாக இருப்பதாகவே உணர்கிறோம். புதிய வீரர்களின் வருகை எங்கள் அணிக்கு வேறு தோற்றத்தை கொடுத்துள்ளது. முதல்பாதியில் நாங்கள் எவ்வாறு விளையாடினோமோ அதே போன்று இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாடுவோம் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement