என்னை நல்ல மனிதராக மாற்றியது இவர்தான். இவர் இல்லையெனில் நான் கடினமான ஆளாகவே இருந்திருப்பேன் – கோலி பேட்டி

Kohli

இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் தற்போது விராட் கோலி கேப்டனாக திகழ்ந்து வருகிறார். ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி தற்போது உலகின் முன்னணி வீரராக வளர்ந்து நிற்கிறார். அவரது ஆக்ரோஷமான கேப்டன்சிக்கு எப்போதும் ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர்.

Kohli

இவரது தலைமையில் ஐசிசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றவில்லையே தவிர மற்றபடி பல சாதனைகளை படைத்துள்ளது. இருப்பினும் விரைவில் இவரது தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் அவரை ஆதரித்து வருகின்றனர். விராட் கோலி கடந்து 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது தான் ஒரு நல்ல மனிதனாக மாறி இருப்பதற்குக் காரணம் தன் மனைவி தான் காரணம் என்று அவர் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :
விஷயங்களை வேறு கோணத்தில் பார்க்க எனக்கு அனுஷ்கா கற்றுக் கொடுத்திருக்கிறார். எனக்கு துணையாக அவர் இருப்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.

anushka

நிறைய விஷயங்களை பெருமளவில் புரிந்து வைத்திருக்கிறார். ஒரு நல்ல விளையாட்டு வீரராக, ஒரு நல்ல மனிதனாக, மக்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இப்போது உருவாகியிருக்கும் இந்த நிலைமைக்கு அனுஷ்கா தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். கடினமான மனநிலையில் இருந்த என்னை மென்மையாக மாற்றியுள்ளார்.

- Advertisement -

Anushka-1

மேலும் நான் அனுஷ்காவை மட்டும் சந்திக்காமல் இருந்திருந்தால் மாறி இருக்க மாட்டேன் ஒரு கடினமான ஆளாகவே இருந்து இருப்பேன். என்னை நல்ல விதத்தில் மாற்றியது அவர்தான் என்று கூறி நெகிழ்ச்சியாக கூறியது குறிப்பிடத்தக்கது,