கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல. கடைசில இப்படி ஆயிடுச்சே – வருத்தத்தில் பேசிய விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் குவித்தது. இதனால் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 303 ரன்களை குவித்தது.

indvseng

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக ஐந்தாவது நாளில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை காரணமாக கடைசி நாளில் ஒரு பந்து கூட வீச படாமல் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட போட்டி என்பதால் போட்டி மழையால் கைவிடப்பட்ட பிறகு இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்ததால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Siraj-1

ஆனால் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு குறித்து பேசிய விராட் கோலி கூறும்போது : கடைசி நாளில் போட்டி நடந்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஐந்தாவது நாள் போட்டி நடைபெறாதது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

ஏனெனில் இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு இருந்தும் அது பறிபோனதில் எனக்கு வருத்தம்தான். இந்த போட்டியில் எங்களது கையே ஓங்கி இருந்தது என்றும் இறுதியில் ஆட்டம் டிராவில் முடிந்து விட்டது என விராட் கோலி வருத்தத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement