கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் இவர்தான். அவரை பின்பற்றியே என் கிரிக்கெட் வாழ்வை முடிப்பேன் – விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது அரையிறுதி வரை இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இருப்பினும் அரையிறுதிப் போட்டியில் எதிர்பாராத விதமாக இந்திய அணி தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

Kohli

- Advertisement -

இதனை தொடர்ந்து இந்திய அணியின் மீதும், கேப்டன் விராட் கோலி மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்திய அணியின் கேப்டன் மாற்றம் குறித்த பேச்சும் அடிபட்டது. ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோலியின் கேப்டன்சி குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்திய அணியின் தேர்வுக்குழு கோலியின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அவருக்கு கேப்டன் பதவி கொடுத்து தொடரச் செய்ததுள்ளது. இந்நிலையில் கோலி தனது ரோல் மாடல் குறித்து கூறிய ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கோலி குறிப்பிட்டதாவது :

sachin-kohli

கிரிக்கெட்டில் எனது சூப்பர் ஹீரோ சச்சின் தான். அவர் எப்பொழுதும் என்னுடைய ஹீரோ என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் மீதி நாட்களில் அவர்தான் எனக்கு ஹீரோ. எத்தனையோ வீரர்கள் வந்தாலும் போனாலும் சச்சின் செய்த சாதனைகளை எவராலும் ஈடு செய்ய முடியாது. என்னுடைய கிரிக்கெட்டின் மீதி நாட்களை அவரை பின்தொடர்ந்து நான் முடிக்க விரும்புகிறேன். என்று கோலி கூறிய இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement