என்ன நடந்தாலும் இவரை அணியில் இருந்து நீக்க முடியாது. என் சப்போர்ட் அவருக்கு உண்டு – விராட் கோலி பேட்டி

Kohli-2 Press
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி. இந்த போட்டியில் தனது பொறுப்பற்ற பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய இளம் வீரர் ஒருவரை, ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் வசைபாடி வருகின்றனர். குறிப்பாக பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் அதிரடியாக ஆட நினைத்து தனது விக்கெட்டை எதிரணிக்கு எளிதாக வாரி வழங்கி இருக்கும் அவருக்கு, உண்மையில் இந்திய அணியை வெற்றி பெற வைப்பதற்கான நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

taylor

- Advertisement -

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்திருக்கும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, அந்த இளம் வீரர் அப்படி விளையாடினால்தால் எங்களால் எதிரணியின் மீது அழுத்தத்தை செலுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் இருந்து சிறப்பான ஆட்டத்தை மட்டுமல்லாமல் பொறுப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வந்த ரிஷப் பன்ட், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக இந்த இறுதிப் போட்டியில் மீண்டும் தனது அலட்சியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் இன்னிங்சில் பவுண்டரிக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டைப் பறிகொடுத்த அவர், இரண்டாவது இன்னிங்சின்போது முன்னனி வீரர்கள் அவுட்டான நிலையில், பொறுப்பாக ஆடி ரன்களை சேர்க்காமல் அதிரடியாக ஆட நினைத்து தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தார். அவருடைய இந்த செயல்பாட்டைக் கண்ட இந்திய ரசிகர்கள் மீண்டும் ரிஷப் பன்ட் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் என்றும், ஆட்டத்தின் போக்கை உணர்ந்து அதற்கேற்றார்போல் விளையாட தவறிவிட்டார் என்றும் சரமாரியான விமர்ச்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Pant

ரிஷப் பன்ட் மீதான இந்த விமர்ச்சனங்களை எல்லாம் விராட் கோஹ்லி ரூம் போட்டு படித்திருப்பார்போல. ஏனெனில் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பதற்கு முன்னரே ரிஷப் பன்ட்டைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார் அவர். அந்த பேட்டியில் பேசிய அவர் கூறியிருப்பதாவது,
ரிஷப் பன்ட் தனக்கு வய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவருடைய திறமையை நிரூபித்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அவர் அணியின் சூழ்நிலையை நன்றாக உணர்ந்து கொண்டுதான் விளையாடுகிறார். சில நேரங்களில் அவர் விளையாடும் விதம் பலன் கொடுக்காது. அப்போதெல்லாம் அவரின்மேல் விமர்ச்சனங்கள் எழும்.

- Advertisement -

விளையாட்டில் இது எப்போதுமே நிகழும் ஒன்றுதான். அதற்காக நாங்கள் அவருடைய பேட்டிங் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எந்த நிபந்தனையும் வைக்கப்போவதில்லை. எதிரணியின் மீது அழுத்தம் கொடுப்பதற்ககாக, அவர் அப்படி விளையாடித்தான் ஆக வேண்டும். அதுதான் எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த ப்ளேயராக வருவார் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

pant

இந்த இறுதிப் போட்டியில் ரிஷப் பன்ட்டின் அலட்சியமான ஆட்டத்தைப் பார்த்த முன்னாள் வீரர்கள் பலரும், எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக ரிஷப் பன்ட் தனது பேட்டிங்கில் இருக்கும் குறையை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி செய்யாத பட்சத்தில் இங்கிலாந்தில் அவர் தடுமாறுவார் என்றும் அறிவுரை வழங்கி வந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் இப்படி கூறியிருப்பது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

Advertisement