- Advertisement -
ஐ.பி.எல்

கோப்பையை ஜெயிக்கலன்னாலும் அந்த சம்பவத்தை காலத்திற்கும் மறக்க முடியாது.. அவங்களுக்கு நன்றி.. கோலி உருக்கம்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கண்டிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் வழக்கம் போல முதல் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 தோல்வியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் ஒரு மாதமாக கடைசி இடத்தில் திண்டாடியது. அதனால் முதல் அணியாக வீட்டுக்கு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு கடைசி 6 போட்டியில் 6 வெற்றிகளை பெற்றது.

குறிப்பாக கடைசி போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குள் 4வது அணியாக நுழைந்தது. மறுபுறம் எலிமினேட்டர் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் கடைசி 5 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் பெங்களூரு அணி ராஜஸ்தானை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

விராட் கோலி உருக்கம்:
ஆனால் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற எலிமினேட்டரில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி பெங்களூருவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் நாளை நடைபெறும் குவாலிபர் 2 போட்டியில் விளையாடுவதற்கு ராஜஸ்தான் தகுதி பெற்றது. ஆனால் தோல்வியை சந்தித்த பெங்களூரு 2008 முதல் தொடர்ந்து 17வது வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

அதன் காரணமாக விராட் கோலியும் ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இம்முறை கோப்பையை வெல்லாவிட்டாலும் தொடர்ந்து 6 போட்டியில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதை எப்போதும் மறக்க முடியாது என்று விராட் கோலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருடத்தின் முதல் பகுதியில் நம்முடைய செயல்பாடுகள் சராசரிக்கும் குறைவாக இருந்தது”

- Advertisement -

“வீரர்களாக எங்களிடமுள்ள தரத்திற்கு நாங்கள் எதிர்பார்ப்பு நிகராக செயல்படவில்லை. அதன் பின் சுயமரியாதைக்காக சுதந்திரமாக விளையாடிய எங்களுக்கு தன்னம்பிக்கை மீண்டும் வந்தது. அதனால் அனைத்தையும் திருப்பி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது உண்மையாகவே ஸ்பெசலானது. அதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஏனெனில் அது ஒவ்வொரு அணி வீரரின் இதயத்தில் இருந்து வெளிப்பட்ட கேரக்டரால் கிடைத்தது”

இதையும் படிங்க: 257 போட்டிகள்.. 4842 ரன்ஸ்.. வாழ்த்திய கோலி.. பிரியா மனதுடன் விடைபெற்ற டிகே.. ஐபிஎல் சாதனைகள் இதோ

“அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். கடைசியில் நாங்கள் எப்படி விளையாட விரும்பினோமோ அப்படி விளையாடினோம். ரசிகர்களிடம் ஆதரவு அலாதியானது. இந்த சீசன் சரியாக இருந்தது. வேறுபட்டதாக இல்லை. அதற்காக நாங்கள் எப்போதும் நன்றியுடன் இருப்போம். பெங்களூருவில் மட்டுமல்ல நாடு முழுவதும் நாங்கள் விளையாடிய இடங்களில் அவர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றியுடன் இருப்போம். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி” என்று கூறினார்.

- Advertisement -