எங்களுக்கு பயமா..! இங்கிலாந்திடம் போய் கேளுங்கள்..! கோலி சரவெடி பதில்..! – காரணம் இதுதான்..?

- Advertisement -

ஐயர்லாந்து அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுளள்து. இதில் 5 டெஸ்ட், 3 ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட்டுவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லாமல் மிகவும் கூலாக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துளளார்.
Virat-Kohli
அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற உள்ள இந்த தொடர் இந்தியாவிற்கு மிகவும் ஒரு முக்கியமான தொடராக கருதப்படுகிறது. அதே போல உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் ஆடும் இந்த தொடர், இந்திய அணிக்கு ஒரு ஆயுத்த பயற்சியாகவும் இருக்கும்.

இந்த தொடர் இந்தியாவிற்கும், கோலிக்கும் மிகவும் முக்கியமான ஒரு தொடராகும். ஏனெனில் கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. மேலும், இந்த தொடரில் கோலி 10 இன்னிங்ஸ்களில் 135 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இன்று (ஜூன் 3) இந்த தொடரின் முதல் டி20 போட்டி தொடங்க உள்ளது. இது குறித்து பத்திர்கையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த கோலி “நாங்கள் எந்தவிதமான அச்சமில்லாமல் மிகவும் கூலாக இருக்கிறோம். நாங்கள் வந்திருப்பதால் இங்கிலாந்து அணிக்குத்தான் பயம் இருக்க வேண்டும். சிறந்த அணியை அவர்கள் மண்ணில் வைத்து வீழ்த்துவது என்பது சிறப்பானது தானே.

கடந்த 2016-17ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்திருந்தது. அப்போது, நாங்கள் தான் கோப்பையை வென்றோம். நாங்கள் எதையும் இழக்க விரும்பவில்லை, ஒரு அணியாக எங்களை முன்னேற்றிக்கொள்ள விரும்புகிறோம். இங்கிலாந்தில் காலநிலை எங்களுக்கு நிச்சயம் ஒத்துப்போகும்.” என்று மிகவும் நம்பிக்கயுடன் பேசியுள்ளார் கோலி.

Advertisement