விராட் கோலியுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் தெரியுமா ? – நெகிழவைக்கும் கோலியின் பதிவு

Rajkumar-sharma

இந்தியா முழுவதும் இன்று ஆசிரியர் தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களது வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடன் இருந்த உறவு குறித்த கருத்துக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Rajkumar

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனக்குப் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரை விட்டு விட்டு வித்தியாசமாகத்தான் கிரிக்கெட்டில் உயரக் காரணமாக இருந்த சிறுவயது பயிற்சியாளருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கோலி குறிப்பிட்டதாவது : உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மதிப்புமிக்க பாடங்களை கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர்தான். அந்த வகையில் எனக்கு மதிப்பு மிக்க பாடங்களைக் கற்றுக் கொடுத்தது எனது கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தான். அவரிடம் எனக்கு கிடைத்த பாடங்கள் நிறைய அதற்காக நான் எப்போதும் அவருக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

இப்படி மாணவர்களை வழி நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என்று தனது கிரிக்கெட் பயிற்சியாளருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை அவர் சொல்லியுள்ளார். மேலும் அவரது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள கோலி நெகிழ்ச்சியாக இந்த பதிவினை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்துவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -