இதை நீங்களும் பண்ணா ஸ்மார்ட் ஆகிடுவீங்க. இவ்ளோ நாள் வளத்து வேஸ்ட் போச்சே – கோலி வெளியிட்ட பதிவு

Virat Kohli
- Advertisement -

உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பின் முன்னெச்சரிக்கை காரணமாக இந்தியா இந்த வைரஸ் பரவ துவங்கிய சில நாட்களிலேயே முன்னெச்சரிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அதன் காரணமாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என எதுவும் நடைபெறவில்லை. மேலும் திரையரங்கம், ஷாப்பிங் மால் மற்றும் பார்க் என பொதுமக்கள் ஒன்றுகூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன.

மேலும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு அடுத்த கட்ட முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை மீண்டும் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த குவாரண்டைன் நேரத்தில் தங்களது வீட்டில் நேரத்தை கழித்து வருகின்றனர்.

- Advertisement -

கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என லைவில் வந்து கிரிக்கெட் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கோலி தனது வீட்டிலேயே உள்ளார் அவர் குறித்த சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது மனைவியான அனுஷ்கா சர்மா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது கோலி தனது வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் தனது தாடியை ட்ரிம் செய்யும் விடீயோவை வெளியிட்டு இப்படி செய்தால் ஸ்மார்ட் ஆகிவிடுறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தனிமையில் இருக்கும் கோலியை சீண்டும் விதமாக அவரது மனைவி அனுஷ்கா சர்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டதாவது : கோலி இந்த நேரத்தில் ரசிகர்களின் பல லட்சம் ரசிகர்களின் சப்தத்தை ரொம்பவே மிஸ் செய்கிறார்.

அதாவது ஐபிஎல் தொடர் நடந்து இருந்தால் கோலி… கோலி…என்று ரசிகர்கள் கோஷமிட்டு இருப்பார்கள் அந்த சத்தம் அவர் இப்போது மிஸ் செய்வதால் அதனை நானே சொல்கிறேன் என்று கூறி குறிப்பிட்டு அனுஷ்கா சர்மா அதேபோன்று கோலியை உற்சாகப்படுத்தும் வகையில் கத்தி கூச்சல் இடுகிறார். ஆனால் இதனை கண்ட கோலி அவரை பார்த்து சற்று காண்டாகி சைடாக ஒரு லுக் விடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement