சச்சின், கவாஸ்கர், டிராவிட் ஆகியோரை தொடர்ந்து 4 ஆவது இந்திய வீரராக விராட் கோலி – படைக்கவுள்ள சாதனை

Virat-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்காக ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியானது ஹைதராபாத் சென்றடைந்து தீவிர பயிற்சியினையும் மேற்கொண்டு வருகிறது.

அதேபோன்று பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஏற்கனவே இந்தியா வந்தடைந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வரும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

மேலும் இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

ஆம், இதுவரை இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8848 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் அவர் 152 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன்பதாயிரம் (9000) ரன்களை தொட்ட நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

இவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள வேளையில் தற்போது விராட் கோலியின் இந்த மாபெரும் சாதனை பட்டியலில் இணைய அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்.. முதல் வீரராக சாதனை படைத்து.. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கப் போகும் அஸ்வின்

மேலும் இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் இருப்பதால் நிச்சயம் விராட் கோலி இன்னும் பல சாதனைகளை படைக்கவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு இதுவரை 29 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ள கோலி இந்த தொடரில் தனது 30 ஆவது சதத்தையும் அடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement