அடுத்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 8 ஆவது இந்திய வீரராக விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் – இமாலய சாதனை

Virat
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் ஆட்டமானது மார்ச் 2-ஆம் தேதி துபாய் நாட்டில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் தற்போது இரு அணி வீரர்களும் துபாய் ஐசிசி அகாடமி மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

8 ஆவது வீரராக இமாலய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி :

இந்த தொடருக்கு முன்னதாக மோசமான பேட்டிங் ஃபார்மை சந்தித்திருந்த விராட் கோலி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தார்.

- Advertisement -

இன்னும் இந்த தொடரில் ஒரு சில போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேலையில் அதிலும் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பெற்று தருவார் என்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருப்பதன் மூலம் எட்டாவது இந்திய வீரராக விராத் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 299 போட்டிகளில் விளையாடி 287 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 51 சதம் மற்றும் 73 அரைசதம் என 14,085 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : 37 எஸ்ட்ராஸ்.. ஆஸி 3வது மோசமான சாதனை.. ஆப்கானிஸ்தான் வீரரிடம் நேர்மையை காட்டிய ஸ்மித்.. நடந்தது என்ன?

இதன் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவர் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் விளையாடிய எட்டாவது இந்திய வீரர் என்ற இமாலய சாதனையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement