இதனால் தான் கோலி பல ஒருநாள் சதம் அடித்திருக்கிறார்..! ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்..! – காரணம் இதுதான்..?

smith

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக இருந்து வரும் கோலி இந்திய அணியின் சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தனது நிலையான அனைத்து போட்டிகளிலும் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி அதிக சதத்தை குவித்ததற்கான காரணத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னால் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
virat
சமீபத்தில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓராண்டு தடை பெற்றார் ஸ்மித். தற்போது கனடா நாட்டில் நடைபெற்று வரும் குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். டொராண்டோ நேஷனல்ஸ் அணியில் விளையாடி வரும் ஸ்மித் நீண்ட மாதங்களுக்கு பின்னர் களமிறங்கிய முதல் டி20 போட்டியிலே அரை சதம் அடித்து அசத்தினார்.

ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த போது, இவரை பலரும் இந்திய கிரிக்கெட் அணியின் கோலியுடன் ஒப்பிட்டு பேசி வந்தனர். இந்நிலையில் கோலி அதிக போட்டிகளில் விளையாடியதால் தான் அதிக சதங்களை அவரால் அடிக்க முடிந்தது என்று சூட்சமமாக தெரிவித்துள்ளார் ஸ்மித் . இது குறித்து அவர் தெரிவிக்கையில்
Smith
“இந்திய அணி எங்கள் அணியை விட நிறைய ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது என்று நினைக்கிறேன். அதில் விராட் எத்தனை போட்டிகளில் விளையாடி உள்ளார் என்று தெரியவில்லை. ஆனால், விராட் கோலி ஒரு சிறந்த வீரர் தான் ” என்று தெரிவித்துள்ளார். இதுவரை 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 8 சதங்களை மட்டுமே அடித்துளளார். ஆனால், 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 35 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.