ஐ.பி.எல் தொடரில் மாபெரும் இமாலய சாதனையை நிகழ்த்திய விராட் கோலி – இதெல்லாம் உண்மையிலே வேறலெவல் தான்

Virat Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியையும் பதிவு செய்திருந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 174 ரன்கள் குவித்தது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் பெங்களூரு அணியின் இந்த நல்ல ரன் குவிப்பிற்கு கேப்டன் விராட் கோலி மற்றும் டூப்ளிசிஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து முக்கிய காரணமாக அமைந்தனர். அதிலும் குறிப்பாக டூபிளெஸ்ஸிஸ் 84 ரன்களையும், விராட் கோலி 59 ரன்களையும் அடித்து அசத்தியிருந்தனர்.

அதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 150 ரன்களை மட்டுமே எடுக்க பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அரைசதமடித்த விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறினார்.

Virat Kohli

அந்த வகையில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் நேற்று அடித்த அரைசதமானது ஒட்டுமொத்தமாக அவரது 89-வது அரைசதமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் கிரிஸ் கெயிலை(88 அரைசதங்கள்) பின்னுக்கு தள்ளி அவர் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் 96 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 30 ரன்கள் அடிப்பதே பெரிய சாதனையாக பார்க்கப்படும் இவ்வேளையில் ஐபிஎல் தொடரில் மட்டும் விராட் கோலி நேற்று அடித்த இந்த 59 ரன்களை சேர்த்து நூறாவது முறை 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் வேறுயெந்த ஒரு வீரரும் 100 முறை 30 பிளஸ் ரன்களை அடித்ததில்லை.

இதையும் படிங்க : IPL 2023 : அப்டி ஆகிருந்தா மட்டும் பாராட்டவா போறீங்க? ஐபிஎல் விளையாடாதீங்க என விமர்சித்த சேவாக்கிற்கு வார்னர் பதிலடி

இவ்வேளையில் முதல் நபராக இந்த சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை மொத்தம் 221 ஐ.பி.எல் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி நேற்று 100-வது முறையாக 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இந்த பட்டியலில் ஷிகார் தவான் (91) இரண்டாவது இடத்திலும், டேவிட் வார்னர் (90) மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா (85) நான்காவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா (77) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement