சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங்கின் இடத்தை காலி செய்த விராட் கோலி – மிகப்பெரிய சாதனை

Kohli
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்கள் குவித்து அசத்தியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் விராத் கோலி அரைசதம் கடந்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீபகாலமாகவே சதத்திற்காக காத்திருக்கும் கோலியின் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை அவர் அரை சதத்தை கடந்து ஆட்டம் இழந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

kohli 1

- Advertisement -

நேற்றைய போட்டியில் 79 பந்துகளை சந்தித்த கோலி 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என அசத்தலாக 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். கோலி மற்றும் ராகுல் இணைந்து 119 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் கோலி சதத்தை தவறவிட்டாலும் பல சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் 3வது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்த விராட் கோலி 25 ரன்கள் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கி 10 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 330 ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கி 12662 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார் .

kohli

ஆனால் விராட் கோலி தற்போது 190 ஒருநாள் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கி விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் வெகு விரைவில் அவர் பாண்டிங்கின் அதிக ரன்கள் சாதனைகளையும் முறியடித்து விடுவார். இந்த பட்டியலில் 3வது இடத்தில் இலங்கை அணியின் குமார் சங்ககாரா 238 ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கி 9747 ரன்களை எடுத்துள்ளார்.

Kohli-story

ஜாக் கல்லீஸ் 4வது இடத்தில் 7774 ரன்களுடனும் அடுத்தடுத்து இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோலி சதம் அடித்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் தொடர்ச்சியாக அவர் ரன்கள் குவிப்பது மட்டுமின்றி சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement