டி20 உலககோப்பையில் இவர் விளையாடறது கன்பார்ம். எங்களுக்கு கிடைத்த சொத்து அவர் – விராட் கோலி பாராட்டு

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் தமிழக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் சேர்க்கப்பட்டிருந்தார். மூன்று போட்டிகளிலும் விளையாடிய அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகளை எடுத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் நடராஜன் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அறிமுகத்திலேயே தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி விட்டார்.

Nattu

- Advertisement -

இதனால் இனிவரும் தொடர்களிலும் அவர் பெயர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெறும் என்றும் அவர் பெரிய இடத்திற்கு செல்வார் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : ஷமி மற்றும் பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாத சூழ்நிலையிலும் நடராஜன் மிகச் சிறப்பாக விளையாடினார்.

நெருக்கடியான நிலையில் கூட அவர் சிறப்பாக விளையாடினார். அவரது கடின உழைப்பு மற்றும் பணிவு தன்மை அவரை இன்னும் பல உயரத்திற்கு இட்டுச் செல்லும். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்கக்கூடிய ஒரு சொத்து. இதே போன்று அவர் சிறப்பாக தொடர்ந்து விளையாடினால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் முக்கிய வீரராக வலம் வருவார் என கோலி தெரிவித்துள்ளார்.

nattu 1

கோலியின் இந்த பேட்டி மூலம் இனிவரும் தொடர்களில் நடராஜன் நிச்சயம் பெறுவார் என்று என்பது உறுதியாகி உள்ளது. ஏனெனில் கோலி ஒருவரின் மீது நம்பிக்கை வைத்து அவரை பாராட்டி பேச ஆரம்பித்தால் நிச்சயம் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குவார் அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்ததை நேரில் கண்டதாலே கோலி அவருக்கு வாய்ப்பளித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Nattu-1

கோலியின் இந்தப் பேட்டியின் ஆல் நிச்சயம்நடராஜன் இனிவரும் டி20 தொடர்களில் மட்டுமின்றி உலக கோப்பை டி20 தொடரிலும் நடராஜன் இடம் உறுதியாகும் என்பது தெளிவாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்று கனவுகளை சுமந்து ஆஸ்திரேலிய சென்ற நடராஜன் இப்போது உலகமே வியந்து பார்க்கும் பவுலராக மாறியிருப்பது நம் அனைவர்க்குமே மகிழ்ச்சி தான்.

Advertisement