- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சதத்தை விட இந்தியாவின் வெற்றியே முக்கியம்.. இதை செஞ்சா போதும் ஈஸியா சேசிங் செய்யலாம்.. சேஸ் மாஸ்டர் கோலி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றது. குறிப்பாக மார்ச் நான்காம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வலுவான உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 265 ரன்களை இந்தியா 48.1 ஓவரில் துரத்தியது.

அதிகபட்சமாக விராட் கோலி 84 ஸ்ரேயாஸ் ஐயர் 45 ராகுல் 42* ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்கள். குறிப்பாக அழுத்தமான செமி ஃபைனலில் நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 84 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தன்னை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்தார். இருப்பினும் அந்தப் போட்டியில் சதத்தை அவர் தவற விட்டது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

- Advertisement -

சாதனை சதங்கள் முக்கியமல்ல:

இந்நிலையில் சதம் போன்ற சாதனைகளை விட இந்தியாவின் வெற்றியே தமக்கு எப்போது முக்கியம் என்று விராட் கோலி மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும் எவ்வளவு அழுத்தமாக இருந்தாலும் விக்கெட்டை விடாமல் நங்கூரமாக விளையாடுவதே சேசிங் செய்து வெற்றி பெறுவதற்கான தாரக மந்திரம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி விராட் கோலி பேசியது பின்வருமாறு.

“செமி ஃபைனல், ஃபைனல் போன்ற போட்டிகளில் வெற்றி என்பது அழுத்தத்தை பொறுத்தது. அதில் விக்கெட்டுகளை கையில் வைத்துக் கொண்டு ஆழமாக நீங்கள் செல்லும் போது எதிரணி உங்களுக்கு வாய்ப்பை வழங்குவார்கள். அப்போது வெற்றி எளிதாகும். போட்டி நடைபெறும் போது உங்களுடைய தூண்டுதல்களை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்”

- Advertisement -

சேசிங் திட்டம்:

“மேலும் எவ்வளவு ரன்கள் ஓவர்கள் மீதும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அந்த சூழ்நிலைகளில் வெற்றிக்கான இடைவெளி 25 – 30 ரன்கள் அல்லது ஓவருக்கு 6 ரன்கள் தேவைப்பட்டால் கூட கையில் 6 – 7 விக்கெட்டுகளை வைத்திருந்தால் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். சாதனைகள் என்பது எனக்கு முக்கியமல்ல. அது நீங்கள் பார்க்க வேண்டிய ஒன்று. சாதனைகளை நீங்கள் பார்க்காத போது அது வெற்றியுடன் சேர்ந்து வரும்”

இதையும் படிங்க: ஃபார்ம், ஓய்வை பார்க்காதீங்க.. இந்திய அணியில் ரோஹித் ஏற்படுத்தியிருக்கும் இதை பாருங்க.. கம்பீர் பதிலடி

“என்னைப் பொறுத்த வரை அனைத்தையும் பெருமையுடன் எடுத்துக் கொண்டு எனது அணிக்காக வேலை செய்ய வேண்டும். அதில் சதத்தை அடித்தால் சிறந்தது. இல்லையென்றால் உங்களுடைய ஆட்டம் அணியை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அந்த மகிழ்ச்சியுடன் நீங்கள் மீண்டும் சிறப்பாக விளையாட கடினமாக உழைக்க வேண்டும். இதையே என்னுடைய கேரியர் முழுவதும் செய்து வருகிறேன். எனக்கு இனிமேலும் சாதனைகள் முக்கியமல்ல. களத்திற்கு சென்று எனது அணிக்கான வேலையை செய்வதே முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -