ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடன் பயணித்துள்ள நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்ற போது அந்த போட்டியில் 8 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார்.
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து குட் பை சொன்ன விராட் கோலி :
அதற்கு அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. எப்பொழுதுமே ராசியான இந்த அடிலெய்டு மைதானத்தில் வழக்கம்போல் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் பெருமளவு அவரது ஆட்டத்தை நேரில் காண வந்தனர்.
ஆனால் இந்த போட்டியிலும் அவர் நான்கு பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி வெளியேறியிருந்தார். தனது இத்தனை ஆண்டுகால ஒருநாள் கரியரில் இப்படி விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாவது இதுவே முதல்முறை. இன்று அவர் இப்படி ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற விராட் கோலி ஒருநாள் போட்டியில் மட்டுமே இனி விளையாட இருக்கும் வேளையில் இந்த ஆஸ்திரேலியா தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் இப்படி டக் அவுட்டாகியுள்ளது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று அடிலெய்டு மைதானத்தில் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறிய போது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை அளித்தனர். அவரும் அதற்கு பதிலாக ரசிகர்களை நோக்கி தனது கிளவுசை உயர்த்தி பிடித்து இங்கு கடைசி முறையாக விளையாடுவதை குறிப்பிட்டு அவர்களுக்கு குட் பை சொல்லி ஓய்வறைக்குள் சென்றார்.
இதையும் படிங்க : கே.எல் ராகுலுக்கு எதிராக எந்தவொரு பவுலரும் செய்யாத சம்பவத்தை செய்த ஆடம் ஜாம்பா – விவரம் இதோ
போட்டி நடைபெறும் இந்த அடிலெய்டு மைதானத்தில் 5 சதங்களை அடித்திருக்கும் விராட் கோலி இந்த போட்டிக்கு முன்னதாக தனது மனதிற்கு நெருக்கமான மைதானங்களில் அடிலெய்டும் ஒன்று என்று கூறியிருந்த வேளையில் தற்போது அதே மைதானத்தில் கடைசி போட்டியில் விளையாடுவதை சிம்பாளிக்காக குறிப்பிட்ட பிறகு ரசிகர்களுக்கு கையசைத்து சென்றார் என்றும் தெரிகிறது.



