இப்படியா பண்ணுவீங்க.. விராட் கோலி நிலைமையை கண்டு வருத்தத்தில் ரசிகர்கள் – நடந்தது என்ன?

Kohli
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது ஆறாவது தோல்வியைப் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கான கிட்டத்தட்ட இழந்துள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியானது முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

- Advertisement -

சன் ரைசர்ஸ் அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 102 ரன்களையும், கிளாசன் 67 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி இறுதி வரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் வீரர்கள் மோசமாக பௌலிங் செய்ததை கண்டு வருத்தம் அடைந்த விராட் கோலி மைதானத்திலேயே மனமுடைந்து நின்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

பெங்களூரு அணிக்காக கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வரும் விராட் கோலி தனிநபராக போராடி வந்தாலும் இதுவரை அந்த அணி பெரிய அளவில் சோபிக்காத வேளையில் இந்த தொடரிலும் பவுலர்கள் மோசமாக செயல்பட்டு வருவதை கண்ட விராட் கோலி அதிருப்தியில் நின்றதோடு சேர்ந்து பௌலர்களையும் திட்டினார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே கேட்டதால் விடுறோம் ஆனா.. முஸ்தபிசூர் ரஹ்மானின் கடைசி ஐபிஎல் போட்டியை அறிவித்த வங்கதேச வாரியம்

அந்த காட்சியும் தற்போது வைரலாகி வருகிறது. ஃபீல்டிங்கில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் விராட் கோலி இப்படி கண்கலங்கி நிற்பதை பார்ப்பது வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement