சிஎஸ்கே கேட்டதால் விடுறோம் ஆனா.. முஸ்தபிசூர் ரஹ்மானின் கடைசி ஐபிஎல் போட்டியை அறிவித்த வங்கதேச வாரியம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ரசிகர்களை மகிழ்வித்து நடைபெற்று வருகிறது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே ஓரளவு நன்றாகவே விளையாடி வருகிறது.

இம்முறை சென்னை அணிக்காக வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் முதல் முறையாக விளையாடி வருகிறார். 2016இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி ரோகித் சர்மாவுடன் வம்பிழுத்த அவரை அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி ரன் ஓடிய போது இடித்து தள்ளி கொடுத்த பதிலடி ரசிகர்களால் மறக்க முடியாது.

- Advertisement -

வெளியான அறிவிப்பு:
இருப்பினும் தற்போது தோனியுடன் இணைந்து விளையாடும் அவர் சென்னை அணிக்காக 5 போட்டிகளில் 10* விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். ஆனால் விசா அனுமதி காரணமாக ஏற்கனவே அவர் போட்டியில் விளையாடாதது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

அந்த சூழ்நிலையில் விரைவில் துவங்கும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக வங்கதேசம் தங்களுடைய சொந்த மண்ணில் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வரும் மே மூன்றாம் தேதி துவங்கும் அந்த தொடருக்கான வங்கதேச அணியில் முஸ்ஃதபிசூர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் முழுமையாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதால் அவரை மே 1ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிப்பதாக வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு வாரியத்தின் துணை மேனேஜர் ஷாரியர் நபீஸ் கூறியது பின்வருமாறு. “ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு நாடு திரும்பவுமாறு முஸ்தஃபிசூரிடம் நாங்கள் தெரிவித்திருந்தோம்”

இதையும் படிங்க: பாக்க முடியல.. ஆர்சிபி நல்லதுக்கு சொல்றேன்.. பேசாம அதை செஞ்சுடுங்க.. பிசிசிஐ’க்கு மகேஷ் பூபதி கோரிக்கை

“ஆனால் சென்னை அணிக்கு மே ஒன்றாம் தேதி போட்டி இருக்கிறது. எனவே சென்னை மற்றும் பிசிசிஐ நிர்வாகங்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் அவருடைய விடுப்பை மே ஒன்றாம் தேதி வரை நீட்டிப்பு செய்கிறோம்” என்று கூறியுள்ளது. அதாவது சிஎஸ்கே மற்றும் பிசிசிஐ நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டதால் மே 1ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் எக்ஸ்ட்ராவாக ரஹ்மானை விளையாட அனுமதிப்பதாக வங்கதேச வாரியம் கூறியுள்ளது.

Advertisement